பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 தேவர்கள் வாழ்விடம் திறலுயர் முனிவர் ஆவலோ டடையும் அரும்புகழ் நாடு! ஊனமொன் றறியா ஞானமெய்ப் பூமி1 வானவர் விழையும் மாட்சியார் தேயம்! பாரத நாட்டிசை பகரயான் வல்லனே? நீரதன் புதல்வர் இந் நினைவகற் ருதீர்! தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர், பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வண்மையும், ஞானமும் அறியா நவைபுரி பகைவர் வானகம் அடக்க வந்திடும் அரக்கர்போல் இந்நாள் படைகொணர்ந்து இன்னல்செய் கின்ருர்! ஆலயம் அழித்தலும் அருமறை பழித்தலும் பாலரை விருத்தரைப் பசுக்களை ஒழித்தலும் மாதர்கற் பழித்தலும் மறையவர் வேள்விக்கு ஏதமே சூழ்வதும் இயற்றிநிற் கின்ருர்: சாத்திரத் தொகுதியைத் தாழ்த்துவைக் கின்ருர் கோத்திர மங்கையர் குலங்கெடுக் கின்ருர், எண்ணில துணைவர்காள்! எமக்கிவர் செயுந்துயர்; கண்ணியம் மறுத்தனர்; ஆண்மையுங் கடிந்தனர்; பொருளினைச் சிதைத்தனர்; மருளினை விதைத்தனர்; திண்மையை யழித்துப் பெண்மையிங் களித்தனர்: பாரதப் பெரும்பெயர் பழிப்பெய ராக்கினர்: சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்: வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்துநம் ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர். மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை? வெற்றிகொள் புலையர்தாள் வீழ்ந்துகொல் வாழ்வீர்? மொக்குள்தான் தோன்றி முடிவது போல மக்களாய்ப் பிறந்தோர் மடிவது திண்ணம்! தாய்த்திரு நாட்டைத் தகர்த்திடு மிலேச்சரை 40 45 30 65 60 65