பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தமது வாழ்க்கை முழுதும் பாரதியாரின் உண்மைத் தாசனுகப் பாரதியின் சிறப்புகளைப் பல்வேறு கோணங்களிலிருந்து மக்களுக்கு எடுத்து விருந்தாக அளித்துவருகிருர். இப்போது பாரதியைப்பற்றிய ஒரு நூல் வரிசையை உருவாக்க முன் வந்துள்ளார். பாரதியும் பாட்டும், பாரதியும் தமிழகமும் என்ற இரண்டு நூல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. முதல் நூல் இசை சம்பந்தமானது. இரண்டாவது பாரதி, தமிழ் மக்களை எவ்வாறு தட்டியெழுப்பினர். தமிழில் மறுமலர்ச் சியைத் தோற்றுவித்தார் என்பதைப் பற்றியது. பாரதியும் பாரத தேசமும் என்ற இந்த மூன்ருவது நூல் அவர் பாரத தேசத்தின் பெருமைகளைக் குறித்தும், பாரத மக்களை விடுதலை இயக்கத்தில் பங்குகொள்ள எவ்வாறு ஊக்கினர் என்பது பற்றியும், இந்தியாவின் ஒருமைப்பாட்டை மக்களுக்கு வலியுறுத்தி நம் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் வாழச் சாதிமத பேதங்களைத் தகர்த்தெறிய எவ்வாறு வழி காட்டினர் என்பதைப்பற்றியும் விளக்குவதாகும். பாரதியார் ஒர் தீர்க்கதரிசி. நம் நாடு விடுதலை பெற்று சுதந்திர நாடாக விளங்கப்போகிறதென்பதை மக்களுக்கு உணர்ச்சி மிக்க கவிதைகளின் மூலம் அறிவித்து நம்பிக்கையை ஊட்டினர். சுதந்திர இந்தியாவைத் தம் ஞானக்கண் முன்னல் கண்டு பாடுகிருர்: "ஆடுவோமே-பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திர மடைந்துவிட் டோமென்று' என்று ஆனந்தக் கூத்தாடுகிரு.ர். பல மதங்கள், பல சாதிகள், பல மொழிகள் இருந்தாலும் அவற்றின் காரணமாக இந்தியாவின் ஒற்றுமை சீர்குலைய வேண்டியதில்லை என்பதை விளக்கிப் பாாத மக்களுக்குச் சங்கநாதம் செய்கிருர், "எல்லாரும் ஒர்குலம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்இந்த ஒற்றுமை உணர்ச்சி எவ்வளவு அவசியம்,என்பதை நாம் இன்று உணருகிருேம்,