பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 மாய்நாட் பெருமையின் மாய்பவர் இருமின்! புலையர்தம் தொழும்பைப் பொறுக்கிலார் இருமின்! கலையறு மிலேச்சரைக் கடிபவர் இருமின்1 ஊரவர் துயரில்நெஞ் சுருகுவீர் இருமின்! சோர நெஞ்சிலாத் துரயவர் இருமின்! 100 தேவிதாள் பணியுந் தீரர்இங்கு இருமின்! பாவியர் குருதியைப் பருகுவார் இருமின்! உடலினைப் போற்ரு உத்தமர் இருமின்! கடல்மடுப் பினும்மணம் கலங்கலர் உதவுமின்; வம்மினே துணைவீர்? மருட்சிகொள் ளாதீர்! 105 நம்மனே ராற்றலை நாழிகைப் பொழுதெனும் புல்லிய மாற்றலர் பொறுக்கவல் லார்கொல்? மெல்லிய திருவடி வீறுடைத் தேவியின் இன்னருள் நமக்கோர் இருந்துணை யாகும். பன்னருள் புகழுடைப் பார்த்தனும் கண்ணனும் I1 0 வீமனும் துரோணனும் வீட்டுமன் ருனும் ராமனும் வேறுள இருந்திறல் வீரரும் நற்றுணை புரிவர்; வானக நாடுறும்: வெற்றியே யன்றி வேறெதும் பெறுகிலேம், பற்றறு முனிவரும் ஆசிகள் பகர்வர் | 15 செற்றினி மிலேச்சரைத் தீர்த்திட வம்மின்! ஈட்டியாற் சிரங்களை வீட்டிட எழுமின்! நீட்டிய வேல்களை நேரிருந்து எறிமின்! வாளுடை முனையினும் வயந்திகழ் சூலினும், ஆளுடைக் கால்க ளடியினுந் தேர்களின் 120 உருளையி னிடையினும், மாற்றலர் தலைகள் உருளையிற் கண்டுநெஞ் சுவப்புற வம்மின்! நம்இதம் பெருவளம் நலிந்திட விரும்பும் வன்மியை வேரறத் தொலைத்தபின் னன்ருே ஆணெனப் பெறுவோம்: அன்றிநாம் இறப்பினும் 125