பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 பற்றி வந்திருக்கும் பிரஸ்தாபங்களில் வீர ரஸத்தை' மட்டும் கவனிக்க வேண்டுமே யல்லாமல், மகமதிய நண்பர்கள் தமது விஷயத்தில் உதாஸினம் இருப்ப தாக நினைக்கக்கூடாதென்று கேட்டுக் கொள்கிருேம். நன்றி-பாரதி தரிசனம் முதல் பாகம்-நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-2. தொகுப்பாசிரியர் இளசை மணியன். 25. கோக்கலே சாமியார் பாடல் (இராமலிங்க சுவாமிகள் 'களக்கமறப் பொதுகடம்.நான் கண்டு கொண்ட தருணம்' என்று பாடிய பாட்டைத் திரித்துப் பாடியது) களக்கமுறும் மார்லிநடம் கண்டுகொண்ட தருணம் கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான். விளக்கமுறப் பழுத்திடுமோ? வெம்பிவிழுந் திடுமோ? வெம்பாது விழினுமென்றன் கரத்திலகப் படுமோ? வளர்த்தபழம் கர்சானென்ற குரங்குகவர்ந் திடுமோ? மற்றிங்கன் ஆட்சிசெய்யும் அணில்கடித்து விடுமோ? துளக்கமற யான்பெற்றிங் குண்ணுவனே அல்லால் தொண்டைவிக்கு மோ, ஏதும் சொல்லரிய தாமோ? 26. தொண்டு செய்யும் அடிமை (சுயராஜ்யம் வேண்டுமென்ற பாரதவாசிக்கு ஆங்கிலேய உத்தியோகஸ்தன் கூறுவது) நந்தனர் சரித்திரத்திலுள்ள "மாடுதின்னும் புலையா - உனக்கு மார்கழித் திருநாளா?' என்ற பாட்டின் வர்ணமெட்டு. 1. தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச் சுதந்திர நினைவோடா? பண்டு கண்ட துண்டோ?-அதற்குப் பாத்திர மாவாயோ? (தொண்டு)