பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. கடிப்புச் சுதேசிகள் கிளிக் கண்ணிகள் நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடி-கிளியே! வாய்ச்சொல்லில் வீரரடி! கூட்டத்திற் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி. நாட்டத்திற் கொள்ளாரடீ!-கிளியே! நாளில் மறப்பா ரடி! சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்புகளும் அந்தகர்க் குண்டாகு மோ?-கிளியே! அலிகளுக்கின்ப முண்டோ? கண்கள் இரண்டி ருந்தும் காணுந் திறமை யற்ற பெண்களின் கூட்டமடி!-கிளியே பேசிப் பயனென் னடி? யந்திர சாலை யென்பார் எங்கள் துணிக ளென்பார் மந்திரத் தாலே யெங்கும்-கிளியே மாங்கனி வீழ்வ துண்டோ! உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும் செப்பித் திரிவா ரடி-கிளியே செய்வ தறியா ரடி! தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும் நாவினுற் சொல்வ தல்லால்-கிளியே நம்புத லற்ரு ரடீ! மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர்செய்யப் பேதைகள் போலு யிரைக்-கிளியே ப்ேணி யிருந்தாரடி தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய ஆவி பெரிதென் றெண்ணிக்-கிளியே அஞ்சிக் கிடந்தா ரடி!