பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. "செப்பு மொழிபதி னெட்டுடையாள்எனிற் சிந்தனை ஒன்றுடையாள்." என முழங்குகிரு.ர். சுதந்திர இந்தியா எந்தெந்தத் துறையில் எவ்வாறு முன்னேறவேண்டும் என்று இவைகளையெல்லாம் ஒரு பெரிய பொருளாதார நிபுணரைப்போல் வரையறுத்துத் தம்முடைய கவிதைகளின் மூலம் மக்களுக்கு வழி காட்டுகிருர் : "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்" என்ருெரு பாட்டிலும், "தனியொருவனுக் குணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்று இன்னெரு கவிதையிலும் பாடுவதோடு, "சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்." என்றும் பாடி, கங்கையையும் காவிரியையும் இணைக்கும் பெருந்திட்டத்திற்கு உருக் கொடுத்துள்ளார். இவ்வரிய கருத்துக்களைக் கொண்ட பாக்களையெல்லாம் இந்நூலில் தொகுத்துக் கொடுக்கிருர் தூரன். தமிழ்மொழிப் பற்றுள்ளவர்கள் பெரும்பாலும் சமஸ் கிருதத்தை வெறுக்கிருர்கள். அல்லது உ தா சீன ம் செய்கிருர்கள்: பாரதியாரின் தமிழ்ப்பற்றை யாரும் குறை கூற முடியாது. கம்பனைப்போல் வள்ளுவன்போல் இவ்வுலகில் எவரையுங் காணமுடியாதெனப் பாடிய பாரதியார் 'எங்கள் நாடு' என்ற பாட்டில்,