பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. சுதந்திர தாகம் 1. என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும்.எங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னகை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்? அன்ருெரு பாரதம் ஆக்கவந் தோனே! ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே! வென்றி தருந்துணை நின்னரு ளன்ருே? மெய்யடி, யோம்இன்னும் வாடுதல் நன்ருே? 2. பஞ்சமும் நோயும்நின் மெய்யடியார்க்கோ? பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ? தஞ்சமடைந்தபின் கைவிட லாமோ? தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ? அஞ்சலென் றருள்செயுங் கடமையில் லாயோ? ஆரிய நீயும்நின் அறம்மறந் தாயோ? வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே! வீர சிகாமணி ஆரியர் கோனே! 35. சுதந்திர தேவியின் துதி இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட் டாலும், பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற் ருலும் விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட் டாலும் சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கி லேனே.