பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 நின்னருள் பெற்றி லாதார் நிகரிலாச் செல்வ ரேனும், பன்னருங் கல்வி கேள்வி, படைத்துயர்ந் திட்டா ரேனும், பின்னரும் எண்ணி லாத பெருமையிற் சிறந்தா ரேனும் அன்னவர் வாழ்க்கை பாழாம். அணிகள்வேய்ப் பிணத்தோ டொப்பார். தேவி! நின் ைெளிபெ ருத தேயமோர் தேய மாமோ? ஆவியங் குண்டோ? செம்மை அறிவுண்டோ? ஆக்க முண்டோ? காவிய நூல்கள் ஞானக் கலைகள்வே தங்க ளுண்டோ? பாவிய ரன்ருே நின்தன் பாலனம் படைத்தி லாதார்? ஒழிவறு நோயிற் சாவார். ஊக்கமொன் றறிய மாட்டார்; கழிவுறு மாக்க ளெல்லாம் இகழ்ந்திடக் கடையில் நிற்பார்: இழிவறு வாழ்க்கை தேரார், கனவிலும் இன்பங் காணுர் அழிவறு பெருமை நல்கும் அன்னை! நின் அருள் பெ ருதார். வேறு தேவி நின்னருள் தேடி யுளந்தவித்து ஆவி யுந்தம தன்பும் அளிப்பவர் மேவி நிற்பது வெஞ்சிறை யாயினும் தாவில் வானுல கென்னத் தகுவதே.