பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 அம்மை உன்றன் அருமை யறிகிலார், செம்மை யென்றிழி தொண்டினைச் சிந்திப்பார், இம்மை யின்பங்கள் எய்துபொன் மாடத்தை வெம்மை யார்புன சிறையெனல் வேண்டுமே, மேற்றி சைப்பல நாட்டினர் வீரத்தால் போற்றி நின்னைப் புதுநிலை யெய்தினர், கூற்றி னுக்குயிர் கோடி கொடுத்தும்நின் பேற்றி னைப்பெறு வேமெனல் பேணினர் அன்ன தன்மைகொள் நின்னை அடியனேன் என்ன கூறி இசைத்திட வல்லனே? பின்ன முற்றுப் பெருமை யிழந்துநின் சின்ன மற்றழி தேயத்தில் தோன்றினேன் பேர றத்தினைப் பேணுநல்வேலியே! சோர வாழ்க்கை, துயர்மிடியாதிய கார றுக்கக் கதித்திடு சோதியே! வீர ருக்கமு தேநினை வேண்டுவேன். 36. விடுதலை விடுதலை! விடுதலை! விடுதலை! 1. பறைய ருக்கும் இங்கு தீயர் புல்ய ருக்கும் விடுதலை! பரவ ரோடு குறவ ருக்கும் மறவ ருக்கும் விடுதலை! திறமை கொண்டதீமை யற்ற தொழில்புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே!