பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மஹால், தியாகையர் கீர்த்தனங்கள், எல்லோராவிலுள்ள குகைக் கோயில், ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், சரப சாஸ்திரியின் புல்லாங்குழல்-இவை அனைத்துக்கும் பொதுப்பெயர் ஆர்ய ஸம்பத்து. எனவே, ஆர்ய ஸம்பத் தாவது ஹிந்துஸ்தானத்தின் நாகரிகம். இந்த எம்பத் தைப் பாதுகாக்கும் வரையில் இந்த ஜாதிக்கு உயிருண்டு. இந்த ஸம்பத்திலே துருப்பிடிக்க இடம் கொடுத்தால், இந்த ஜாதியைச் செல் அரித்து விடும். இந்த ஆர்ய ஸம்பத்தை உலகம் உள்ளவரை ஸம் ரrணம் செய்து, மேன்மேலும் ஒளியும் சிறப்பும் உண் டாகும்படி செய்யும் கடமை தேவர்களால் பாரத ஜாதிக்கு ஏற்படுத்தப்பட்ட கடமையாகும். இடையில் நமக்கு நேர்ந்த கேடு. இந்த ஆர்ய ஸம்பத்தை நாம் பல பல நூற்ருண்டுக ளாக ஆதரித்துக்கொண்டு வந்தோம். சென்ற சில நூற் முண்டுகளாக இதில் துருப்பிடிக்க இடங்கொடுத்து விட்டோம். தேவர்கள் நமக்குக் கொடுத்த கடமையைக் கர்வத்தாலும், சோம்பராலும், சிறுமையாலும் உல்லங் கனம் செய்யத் தொடங்கினேம். தேவர்கள் இந்த பாரத ஜாதியைக் கொஞ்சம் செல் அரிக்கக் கடவது என்று ஆசீர்வாதம் பண்ணினர்கள். மலைப்பாம்புக் கதை கேட்டிருக்கிறீர்கள் அல்லவா? அதன் வாலிலே தீப்பற்றி எரியுமாம். மலைப்பாம்பு சுக மாகக் குறட்டைவிட்டுத் தூங்குமாம். செல்லரித்துக் கொண்டுபோனது நமது ஸ்மரணையிலே தட்டவில்லை. அத்தனை கர்வம், அத்தனை கொழுப்பு. அத்தனை சோம்பர். நமது கவிதையிலே ஆனந்தம் குறையத் தொடங் கிற்று, ருசி குறைந்தது. கரடு முரடான கல்லும் கள்ளி