பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 I சாஸ்திரம், தலை, கால்-எல்லாவற்றிலும் இந்தக் கேடு பாய் ந் து வி ட் டது. நோய் முற்றிப்போயிருந்தது. பராசக்தி நல்ல வேளையில் நமக்குள் உயர்ந்த வைத்தியர் பலரை அனுப்பினள். அவளுக்கு நம்மீது கிருபை வந்து விட்டது. எனவே, பிழைத்தோம். ஆலுைம் இம்முறை பிழைத்தது புனர்ஜென்மம். இந்தப் புனர்ஜென்மத்தின் குறிகளை எல்லாவற்றிலும் காண்கிருேம்; பாரதஜாதி புதிதாய்விட்டது. தற்காலத்திலே பூமண்டலத்து மஹா கவிகளில் நம் ரவீந்திரநாதர் ஒருவர் என்று உலகம் ஒப்புக் கொள்கிறது. இதுவரை ஐரோப்பிய பண்டிதர்கள் இயற்கை நூல் (ப்ரகிருதி சாஸ்திரம்) தமது விசேஷ உடைமை என்று கருதிவந்தார்கள். இப்போது நம் ஜகதீச சந்திர வஸ் அந்த வழியில் நிகரற்ற திறமை பெற்றவர் என்பதை மேல்நாட்டு வித்துவான்களில் ஒப்புக் கொள்ளாதார் யாருமில்லை. தமிழ்நாட்டிலே புதிய கவிதையும் சாஸ்திர ஒளியும் விரைவிலே தோன்றும். உலகம் பார்த்து வியப்படையும். - செத்துப் பிழைத்தோம். ஆனால், உறுதியாக நல்ல வயிரம் போலே பிழைத்துவிட்டோம். புதிய ஜன்மம் நமக்கு மிகவும் அழகான ஜன்மமாகும்படி தேவர்கள் அருள் புரிந்திருக்கிருர்கள்; அதன் பொருட்டு அவர்களே இடைவிடாமல் வாழ்த்துகின்ருேம். 38. வேதரிஷிகளின் கவிதையின் முகவுரை பூரீ காசியில் ஹிந்து ஸர்வகலா சங்கத்திற்கு அஸ்தி வாரக் கல் நாட்டியபோது, பல வித்வான்கள் வந்து உபந்யாஸம் செய்தார்கள். இவற்றுள்ளே, நவீன சாஸ்திர (ஸயன்ஸ்) பண்டிதர்களின் சிகாமணியாக விளங்கும் புரீமான் ஜகதீச சந்திர வஸ செய்த உபந்யாசம் மிகவும் மாண்புடையது.