பக்கம்:பாரதியும் பாரத தேசமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 லெளகிக சாஸ்திர ஆராய்ச்சிகளிலே மறுபடியும் பாரத தேசம் தலைமை வகிக்கும்படி செய்வது நம்முடைய கடமை என்பதை இவர் பல வகையிலே விளக்கியபின்பு, தமது முடிவுரையில் பின்வருமாறு சொல்லுகிருர் : 'ஹிந்து நாகரிகத்திற்குள்ளே ஒரு விசேஷ சக்தி யிருக்கிறது. காலத்தின் அழிவுகளையெல்லாம், உலகத்தி லேயுள்ள பொருளனைத்தையும் சிதைவுபடுத்த வரும் மாறுதல்களேயெல்லாம், இந்த சக்தியினலே நமது நாக ரிகம் எதிர்க்க வல்லதாயிற்று. (எகிப்து தேசத்தில்) நீல நதிக்கரையிலேயும், அஸ்ளigயா தேசத்திலும், பாபிலோனி லும், பல்லாயிர வருஷங்களுக்கு முன்னே பெரிய பெரிய அறிவுப் பயிற்சிகள் தோன்றி வளர்ந்ததையும், மாறியதை யும், மறைந்ததையும், நமது மஹத்தான நாகரிகம் பார்த்துக் கொண்டிருந்தது. (அப்போதுகூட நமது நாகரிகம் அளவிடமுடியாத பழமை கொண்டதாக விளங்கிற்று. அந்த நாளிலே பாரதமாதா தனக்கு அழிவில்லையென்ற தீராத பக்தியுடன் விளங்கிள்ை. இன்றும் யெளவனத்தோடிருக்கிருள். இனி, எதிர் காலத்தி லும் அழியமாட்டோமென்கிற தீராத பக்தியிலே உறுதி கொண்டு நிற்கிருள்." இங்ங்னம், நவீன சாஸ்திரக் கல்வியாகிய குன்றத்தின் மேலே நெருப்புத் துணைப்போல ஒளிவீசி நிற்கும் பூரீ மான் வஸ் கூறிய வார்த்தைகள் வெறுமே உபசாரமல்ல. நம்முடைய இடைக்காலத்து மடமைகளையெல்லாம் மஹிமைகளென்று நினைத்து வீண் பெருமை கொள்வோ ரின் பேச்சை நாம் உதறிவிடுதல் நியாயம். ஆனால், வஸ் பண்டிதர் சொல்லியதை நாம் மதிப்புடன் ஏற்றுக் கொள்ளுதல் தகும். இடைக்காலத்திலே நமது ஜாதி, பொய்களும் சோர்வுகளும் குவித்த குப்பையின் கீழே அழுந்திக் கிடந்தது. பாரதமாதா நித்திரையிலிருந்தாள்.