இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை
‘பாரதி அறுபத்தாறு’ என்னும் இந்தச் சிறந்த நூலில் ‘சினத்தின் கேடு‘, ‘தேம்பாமை‘, ‘பொறுமையின் பெருமை‘, ‘கடவுள் எங்கே இருக்கிறார்‘, ‘தாய் மாண்பு‘ முதலிய அநேக விஷயங்களைப்பற்றித் தம் அபிப்பிராயத்தைப் பாரதியார் வெளியிட்டிருக்கிறார். ‘ஸர்வமத ஸமரஸம்‘ என்ற பகுதி பாரதியாரின் மதக் கொள்கைகளையும் வேதாந்தத்தையும் நன்கு விளக்குகிறது.
இப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவரும் பாரதியாரின் உபதேசங்களை ஆவலுடன் ஏற்றுக் கொள்வதுடன் அவர் வெளியிட்டிருக்கும் அபிப்பிராயங்களைப் பிரியமுடன் அங்கீகரிப்பார்களென்று பூர்ணமாக நம்புகிறோம்.
பாரதி பிரசுராலயத்தார்.