பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை x! சிவபாதசுந்தரம் ஆகியோரும் தங்கள் படைப்புக்களில் உரை நடையை தனிப்பட்ட வழிகளில், வளமாக்கியுள்ளனர். வாசவ னுடைய நடையில் அழுத்தமும், உணர்ச்சிகளின் நெளிவும் கன்கு மிளிர்கின்றன. அறிஞர் அண்ணுவின் பேச்சிலும் உரைகடையிலும் மோனே கள், அடுக்கு மொழிகள் கொஞ்சி விளையாடும். இவருடைய வழியைப் பின்பற்றி இதே பாணியிலும் நடையிலும் வேறு பலர் உரைநடையை வளர்த்து வருகிருர்கள். செந்தமிழ், தமிழ்ப் பொழில், செந்தமிழ்ச் செல்வி போன்ற மாசிகைகளில் தொடங்கிய அருஞ் சொற்களைக் கொண்ட கடின மான உரைநடை இன்று எளிமையும், புதிய வனப்பும், தெளிவும் வாய்ந்த உரைநடையாக மலர்ந்து வருகின்றது. கலைமகள், கல்கி போன்ற இதழ்களும், தமிழ்நாடு, தினமணி போன்ற நாளிதழ் களும் இந்த உரைநடை வளர்ச்சியில் பெரிதும் பங்கு பெற்றிருக் கின்றன. தாமரை பேச்சு கடைத் தமிழில் நல்ல கதைகளை வெளி யிட்டு வருகின்றது. ஆராய்ச்சி என்ற இதழை வானமாமலை கல்ல முறையில் நடத்தி வருகிருர், வ.வே.சு. ஐயருடைய பாலபாரதம், மாதவையாவின் பஞ்சா மிர்தம், பாரதியாரின் இந்தியா முதலிய இதழ்கள் தமிழ் உரைநடை வளர்ச்சியில் சீரிய பணியாற்றின. குழந்தைகளுக்குப் புரியும்படியான உரைநடையில் பலர் எழுதியுள்ளனர். தி. ஜ. ர., அழ. வள்ளியப்பா. பூவண்ணன், பெ. தூரன் முதலியோர் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இன்று விஞ்ஞான நூல்களும், கட்டுரைகளும் எளிய தமிழில் வெளிவரத் தொடங்கி இருக்கின்றன. இத்துறையில் பல ஆண்டுகளாக உழைத்தவர் பி. என். அப்புசாமி ஐயர் ஆவர். வளமான உரைநடையில் தெளிவும் எளிமையையும் கலந்து விஞ்ஞான நூல்களை எழுதுவதற்கு வேண்டிய புதிய முயற்சி களையும் காண்கிருேம். இம்முயற்சியில் தமிழ் கலைக்களஞ்சியமும், குழந்தைகள் கலைக்களஞ்சியமும் நன்கு உதவியுள்ளன என்பதைக் குறிப்பிடாமலிருக்க முடியாது. மிகச் சுருக்கமான இக்கட்டுரையில் தமிழ் உரைநடையின் வளர்ச்சியின் பல பகுதிகளையும், விரிவாகக் கூறுதல் இயலாது.