பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. பதிவிரதை இந்தக் காலத்தில், பல பொய்கள் இடறிப்போகின்றன. பல பழைய கொள்கைகள் தவிடு பொடியாகச் சிதறுகின்றன. பல அதிேகள் உடைபடுகின்றன. பல அகியாயக்காரர் பாதாளத்தில் விழுகிருர்கள். இந்தக் காலத்தில், யாருக்கும் பயந்து நாம் நமக்குத் தோன்று கிற உண்மைகளை மறைக்கக் கூடாது. பத்திரிகைகள் தான், இப் போது உண்மை சொல்ல, சரியான கருவி. பத்திராதிபர்கள் இங் தக் காலத்தில் உண்மைக்குப் புகலிடமாக விளங்குகிருர்கள். ஸ்திரீகள் பதிவிரதைகளாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிருர்கள். அதிலே கஷ்டம் என்னவென்ருல், ஆண் பிள்ளைகள் யோக்கியர்கள் இல்லை. ஆண் மக்களில் ஒவ் வொருவனும் தன் மனைவி, மக்கள் பதிவிரதைகளாக இருக்க வேண்டுமென்பதில் எத்தனே ஆவலோடு இருக்கிருனே, அத்தனை ஆவல் இதர ஸ்திரீகளின் பதி விரத்யத்திலே காட்டுவதில்லை. ஒவ் வொருவனும் ஏறக்குறைய தன் இனத்து ஸ்திரீகளை பதிவிரதை என்று நம்புகிருன். ஆணும் பெண்ணும் ஒன்றுக்கொன்று உண்மையாக இருங் தால் நன்மையுண்டாகும்; பதிவிரதைக்கு அதிக வீரமும் சக்தியும் உண்டு. சாவித்திரி தனது கணவனே எமன் கையிலிருந்து மீட்ட கதையில் உண்மைப் பொருள் பொதிந்திருக்கிறது. ஆனால், பதி விரதை இல்லை என்பதற்காக, ஒரு ஸ்திரீயை வதைத்து ஹிம்சை பண்ணி அடித்து ஜாதியை விட்டுத் தள்ளி ஊரார் இழிவாக நடத்தி அவளுடன் யாவரும் பேசாமல் கொள்ளாமல் தாழ்வு படுத்தி அவளைத் தெருவிலே சாகும்படி விடுதல் அகியாயத்திலும் அகியாயம். அட பரம மூடர்களா ! ஆண் பிள்ளைகள் தவறினல் ஸ்திரீ கள் எப்படிப் பதிவிரதைகளாக இருக்க முடியும் ? கற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லக்ஷம்