பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாரதி தமிழ் ஜனங்கள், ஐம்பதியிைரம் பேர் ஆண்கள், ஐம்பதியிைரம் பேர் பெண்கள். அதில் நாற்பத்தையாயிரம் ஆண்கள் பர ஸ்திரிகளை இச்சிப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலிருந்து குறைந்த பrம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பர புருஷரின் இச்சைக்கிட மாக வேண்டும். இந்தக் கட்டத்தில் இருபதியிைரம் புருஷர்கள் தம் இச்சையை ஒரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் கொள் வோம். எனவே, குறைந்த பகடிம் இருபதியிைரம் ஸ்திரிகள் விப சாரிகளாக இருத்தல் அவசியமாகிறது. அந்த இருபதியிைரம் விபசாரிகளில் நூறு பேர்தான் தள்ளப்படுகிருர்கள். மற்றவர் கள் புருஷனுடன் வாழ்கிருர்கள். ஆனால், அவளவளுடைய புருஷனுக்கு மாத்திரம் அவளவள் விபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது. தெரிந்தும் பாதகமில்லையென்று சும்மா இருப்பாரு முளர். ஆகவே, பெரும்பாலோர் விபசாரிகளுடனே தான் வாழ்கி ருர்கள். இதனிடையே, பாதி வ்ரத்யத்தைக் காப்பாற்றும் பொருட்டாக ஸ்திரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லேயின்றி நடைபெற்று வருகின்றன. சீச்சி, மானங் கெட்ட தோல்வி, ஆண்களுக்கு 1 அகியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை ! இதென்னடா, இது ! “ என்மேல் ஏன் நீ விருப்பம் செலுத் தவில்லை ? ' என்று ஸ்திரீயை அடிப்பதற்கு அர்த்தமென்ன ? இதைப்போல் மூடத்தனம் மூன்று லோகத்திலும் வேறே கிடை եւմfr 51. ஒரு வஸ்து கம்முடைய கண்ணுக்கு இன்பமாக இருந்தால், அதனிடத்தில் நமக்கு விருப்பம் இயற்கையிலே உண்டாகிறது. கிளியைப் பார்த்தால் மனிதர் அழகென்று நினைக்கிருர்கள். தவளை அழகில்லை என்று மனிதர் நினைக்கிரு.ர்கள். இதற்காகத் தவளைகள் மனிதரை அடித்தும், திட்டியும், சிறையிலே போட் டும் துன்பப்படுத்த அவற்றுக்கு வலிமை இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படி அவை செய்தால் நாம் கியாயமென்று சொல்லுவோமா ? சில தேசங்களில் அன்னியர் வந்து கொடுங்கோல் அரசு செலுத்துகிருர்கள். அவர்களிடம் அந்த ஜனங்கள் ராஜ பக்தி