பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிவிரதை 87 செலுத்த வேண்டுமென்றும் அங்ங்னம் பக்தி செய்யா விட்டால், சிறைச்சாலையிலே போடுவோம் என்றும் சொல்லுகிரு.ர்கள். அப்படிப்பட்ட ராஜ்யத்தை உலகத்து நீதிமான்கள் அவமதிக்கி ருர்கள். அந்த அரசுபோலே தான், ஸ்திரீகள் மீது புருஷர் செய்யும் கட்டாய ஆட்சியும் ' என்பது யாவருக்கும் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெளிவாக விளங்கும். கட்டாயப்படுத்தி, என்னிடம் அன்பு செய் ' என்று சொல்லுவது அவமானமல்லவா ? ஸ்திரீகள் புருஷரிடம் அன்புடன் இருக்க வேண்டினல், புரு ஷர் ஸ்திரீகளிடம் அசையாத பக்தி செலுத்த வேண்டும். பக்தியே பக்தியை விளைவிக்கும். கம்மைப் போன்றதொரு ஆத்மா கமக்கு அச்சத்தினலே அடிமைப்பட்டிருக்கும் என்று நினைப்பவன் அரச யிைனும், குருவாயினும், புருஷனுயினும் மூடனேத் தவிர வேறில்லை. அவனுடைய நோக்கம் கிறைவேருது. அச்சத்தினால் மனுஷ்ய ஆத்மா வெளிக்கு அடிமைபோல நடித்தாலும் உள்ளே துரோகத்தை வைத்துக் கொண்டுதான் இருக்கும். அச்சத்தினல் அன்பை விளைவிக்க முடியாது.