பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பாரதி தமிழ் தெரியும். உங்களிடம் சொல்லிப் பிரயோஜனம் இல்லே ' என்று சொன்னுள். ராமராயர் :- ' வேறு விஷயம் பேசுவோம்” என்ருர். தான் பாதி பேசும் போது, ராமராயர் தடுத்துப் பேசியதிலிருந்து, அந்த வேதவல்லி அம்மைக்கு கோபம் உண்டாகி, கான் "இவரைக் குறிப் பிட்டு ஒன்றும் சொல்லுவதில்லை யென்றும், இவர் சும்மாயிருக்க வேண்டும் என்றும், ஆரம்பத்தில் செய்யப்பட்ட தீர்மானத்தை இவர் அதற்குள்ளே மறந்து விட்டார்” என்றும் சொல்லி வெறுப் புடன் எழுந்து போய் விட்டார். நான் எத்தனையோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. "ராமராயர் இருக்கும் சபையிலே தான் இருக்கலாகாது” என்று சொன்னாள். அந்த அம்மை சென்ற பிறகு ராமராயர் ஏதோ முனு முணுத்துக் கொண்டிருந்தார், 'என்ன சொல்லுகிறீர்?" என்று கேட்டேன். ஸ்திரீகளுக்கு விடுதலை கொடுப்பது மிகவும் அவசியத்திலும் அவசியம் என்று ராமராயர் சொன்னர். பிறகு மறுபடி சங்கர பாஷ்யத்தில் இறங்கி விட்டோம். 2 அடிமைகள் யாராயினும், அவர்களுக்கு விடுதலே கொடுத்தால், அதினுன்றும் யுகப்பிரளயம் நிச்சயமாக நேரிட்டு, அண்டச் சுவர்கள் இடிந்துபோய் ஜகமே அழிந்துவிடும் என்று சொல்லுதல் அவர்களே அடிமைப்படுத்தி ஆள்வோருடைய ஸம்பிரதாயம். இருபது முப்பது வருஷங்களுக்கு முன்பு, பெண் கல்வி ஏற்பட்டால் மாதர் ஒழுக்கத்தில் தவறி விடுவார்களென்று தமிழ் காட்டில் பலர் கூறினர். இப்போதோ பெண் கல்வி தமிழ் நாட்டில் சாதாரணமாகப் பரவி யிருக்கிறது. அண்டச் சுவர்கள் இன்னும் இடிந்து போகவில்லை. இதுவரை கூடியமட்டும் பத்திர மாகவே இருந்து வருகின்றன. ஆனல் இப்பொழுது பெண்