பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பாரதி தமிழ் களுடைய உழைப்பின் பயனேத் திருடாமலும், மற்றபடி ஏறக் குறைய நான் ஏது பிரியமானலும் செய்யலாம் என்ற கிலேயில் இருந்தால் மாத்திரமே என்னே விடுதலையுள்ள மனிதனுகக் கணக் கிடத்தகும். பிறகுக்குத் தீங்கில்லாமல் அவனவன் தன் இஷ்ட மான தெல்லாம் செய்யலாம் என்பதே விடுதலை என்று ஹெர் பர்ட் ஸ்பென்ஸர் சொல்லுகிருர், இந்த விதிப்படி உலகத்தில் பெரும்பான்மையான ஆண் மக்க ளுக்கே விடுதலை உண்டாகவில்லை. ஆனல் இவ்விடுதலை பெறும் பொருட்டாக நாடுதோறும் ஆண் மக்கள் பாடுபட்டு வருகிருர்கள். ஆண் மக்கள் ஒருவருக்கொருவர் அடிமைப்பட்டிருக்கும் கொடுமை சகிக்க முடியாது. ஆனால், இதில் ஏற்படும் கஷ்டம் கஷ்டங்களைக் காட்டிலும் பல்லாயிர மடங்கு அதிகக் கஷ்ட நஷ்டங்கள் பெண் கூட்டத்தை ஆண் கூட்டம் அடிமைப்படுத்தி வைத்திருப்பதால் விளைகின்றன. அடிமைத் தேசங்களிலே கூட ஆண் மக்களிற் பெரும்பாலோர் -அதாவது ரஹஸ்ய போலீஸ் உபத்திரவத்திற்கு இடம் வைத்துக் கொண்டவர் தவிர மற்றவர்கள்-தம் இஷ்டப்படி எந்த ஊருக்குப் போக வேண்டுமானலும் போகலாம், எங்கும் சஞ்சரிக்கலாம். தனியாக சஞ்சாரம் பண்ணக் கூடாதென்ற கியதி கிடையாது. ஆனல் பெண் தன்னிஷ்டப்படி தனியே சஞ்சரிக்க வழியில்லாத தேசங்களும் உள. அவற்றில் நமது தேசத்தில் பெரும்பகுதி உட் பட்டிருப்பதைப்பற்றி மிகவும் விசனப்படுகிறேன். " ஒஹோ! பெண்கள் தனியாக சஞ்சாரம் செய்ய இடங் கொடுத்தால் அண்டங்கள் கட்டாயம் இடிந்து போகும். ஒருவித மான கியதியும் இருக்காது. மனுஷ்யர் மிருகப் பிராயமாய் விடு வார்கள் ' என்று சில தமிழ் நாட்டு வைதிகர் கினைக்கலாம். அப்படி நினைப்பது சரியில்லை. ஐரோப்பாவிலும், அமெரிக்காவி லும் பெண்கள் இஷ்டப்படி எங்கு வேண்டுமானலும் போகாலா மென்று வைத்திருக்கிருர்கள். அதனுல் பூகம்ப மொன்றும் நேர்ந்து விடவில்லை. பூரீமதி அணி பெஸண்டை கம்மவர்களிலே பலர் மிகவும் மரியாதையுடன் புகழ்ந்து பேசுகிருர்கள். அவரைப் போலே நமது ஸ்திரீகள் இருக்கலாமே ' என்ருல், கம்மவர் கூடா தென்று தான் சொல்லுவார்கள். காரணமென்ன? ஐரோப்பிய