பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் விடுதலை 95 ஸ்திரீகளைக் காட்டிலும் நமது ஸ்திரிகள் இயற்கையிலே கம்பத் தகாதவர்கள் என்று தாத்பரியமா ? மேலும் ஐரோப்பியரை திருஷ்டாந்தம் காட்டினல் நமக்கு ஸ்ரிப்படாது. நாம் ஆரியர்கள், திராவிடர்கள். அவர்களோ கேவலம் ஐரோப்பியர் ' என்று சொல்லிச் சிலர் தலையசைக்கலாம். சரி, இந்தியாவிலே மஹாராஷ்டிரத்தில் ஸ்திரீகள் யதேச்சை யாகச் சஞ்சாரம் பண்ணலாம் , தமிழ் நாட்டில் கூடாது, ஏன் ? பெண்களுக்கு விடுதலை கொடுப்பதில் இன்னும் முக்கியமான ஆரம்பப்படிகள் எவையென்ருல் : (1) பெண்களே ருதுவாகு முன்பு விவாகம் செய்து கொடுக்கக் கூடாது. (3) அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாகம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. (8) விவாகம் செய்து கொண்ட பிறகு அவள் புருஷனை விட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப் படுத்தக்கூடாது. (4) பிதுரார்ஜிதத்தில் பெண்குழந்தைகளுக்கு ஸ்மபாகம் கொடுக்க வேண்டும். (5) புருஷன் இறந்த பின்பு ஸ்திரீ மறுபடி விவாகம் செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது. (6) விவாகமே இல்லாமல், தனியாக இருந்து வியா பாரம், கைத்தொழில் முதலியவற்ருல் கெளரவமாக ஜீவிக்க விரும்பும் ஸ்திரீகளே யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடங்கொடுக்க வேண்டும். (?) பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும் பழகக் கூடாதென்றும் பயத்தாலும் பொருமை யாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிடவேண்டும். (8) பெண்களுக்கு ஆண்களைப் போலவே உயர்தரக் கல்வியின் எல்லாக்கிளைகளிலும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும். (9) தகுதியுடன் அவர்கள் அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பிலுைம் அதைச் சட்டம் தடுக்கக்கூடாது. (10) தமிழ் நாட்டில் ஆண் மக்களுக்கே ராஜரிக சுதந் திரம் இல்லாமல் இருக்கையிலே, அது பெண்களுக்கு வேண்டு