பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பாரதி தமிழ் மென்று இப்போது கூறுதல் பயனில்லை. எனினும், சீக்கிரத்தில் தமிழருக்கு சுயராஜ்யம் கிடைத்தால் அப்போது பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும். சென்ற வருஷத்து காங்கிரஸ் சட்டசபையில் தலைமை வகித்தவர் மிஸஸ் அனிபெஸண்டு என்ற ஆங்கிலேய ஸ்திரீ என்பதை மறந்து போகக் கூடாது. இங்ங்னம் கமது பெண்களுக்கு ஆரம்பப் படிகள் காட்டினே மால்ை, பிறகு அவர்கள் தமது முயற்சியிலே பரிபூரண விடுதலை கிலேமையை எட்டி மனுஷ்ய ஜாதியைக் காப்பாற்றுவார்கள். அப்போதுதான் நமது தேசத்துப் பூர்வீக ரிஷிபத்தினிகள் இருந்த ஸ்திதிக்கு நமது ஸ்திரிகள் வர இடமுண்டாகும். ஸ்திரிகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹர்ஷிகளாக முயலுதல் மூடத்தனம். பெண் உயராவிட்டால் ஆண் உயராது.