பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 பாரதி தமிழ் களில் வாழும் ஜனங்களைப் போல் ஸ்திரீகளின் விஷயத்தில் அதிக கடின சித்தமில்லாமல் அவர்களேத் தயவுடனும், மதிப்புடனும் நடத்துவது வழக்கம். ஐரோப்பாவுக்குள்ளே ஸ்விட்சர்லாண்டு தேசத்து மலைப் பெண்கள் மற்றப் பகுதியிலுள்ள மாதரைக் காட்டிலும் ஸ்வதந்திர முடையோராக வாழ்ந்து வருகின்றனர். மலையாளத்திலோ, மாதர்கள் மிக உயர்ந்த சுதந்திர முடை யோர்களாக யிருப்பது மட்டுமேயன்றி, சொத்துடைமை அங்கு பெண் சந்ததியாருக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்விதமான மலே யாள நாகரிகத்துள் நெருங்கிப் பழகி ஊடாடிக்கொண்டு வந்திருப் பதினின்றும், தமிழ் நாட்டு நாகரிகமும் இங்குள்ள மாதர்களுக்குஹிந்து தேசத்தின் மற்றப் பகுதிகளிலுள்ள மாதர்களேக் காட் டிலும்- அதிக ஸ்வதந்திரம் கொடுத்துக் கொண்டு வந்திருக்கிறது. முகம்மதிய நாகரிகத்தின் ஆதிக்கம் பலமடைந்ததின்றும் வட இந்தியாவில் மேல் ஜாதி ஹிந்து ஸ்திரீகள் கோஷா என்ற முகம் மதிய வழக்கத்தைக் கைக்கொள்ளும்படி ஏற்பட்ட காலத்திலே கூட, தமிழ் நாட்டிலும் அதன் நாகரிகத்தைத் தழுவிய தெலுங்கு, கன்னடம் முதலிய நாடுகளிலும் அந்த வழக்கம் உண்டாகவில்லை. மேலும் உலகத்திலுள்ள மாதர்களுக் கெல்லாம் திே ஆண் மக்களாலேயே விதிக்கப்பட்டது. தமிழ் நாட்டு மாதரும் ராஜதிே சம்பந்தப்பட்ட சிறிதளவிலே பொதுவான ஆண் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தனரேயாயினும், ஜன ஸ்முஹ திேகளின் விஷயத் தில் தமிழ் காட்டில் எப்போதும் ப்ரமாணமாக இயன்று வருவது ஒளவையின் நீதி வாக்கியங்களும் நீதி நூல்களுமேயாம். ஆண் மக்களிலேகூட உயர்ந்த கல்வி பயின்ருேர் மாத்திரமே ஜன ஸ்முஹ விஷயங்களில் வள்ளுவர் குறள், காலடியார் முதலிய வற்றை ப்ரமாணமாகக் கூறுவர். அதிகப் படிப்பில்லாதவர்களும் படிப்பே தெரியாதவர்களுமாகிய ஜனங்கள் ஆண் பெண் அனே வருக்கும் ஒளவையாரின் திேயே வழிகாட்டி. தமிழ் ஜனங்களில் பெரும்பான்மையோருக்கு சுமார் சென்ற இரண்டாயிரம் வருஷங்களாக ஒளவையாரின் நீதியே ப்ரமாணமாக நடைபெற்று வருகின்றது. ஸாமான்ய ஜனங்கள் ஒளவை நீதியைக் கொண்டாடி வருகிருர்களெனில், கற்ருேரும் அரசரும் அதைப் புறக்கணித்து