பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பாரதி தமிழ் இந்த மாதிரியாகப் பெருமைப் படுத்தி நம்மவர் கம்பனைச் சொல்லலாம் ; திருவள்ளுவரைச் சொல்லலாம் ; சிலப்பதிகார மியற்றிய இளங்கோவடிகளைக் கூறலாம் ; இன்னும் பல புலவர்களைக் காட்டலாம். எனினும், கம்பர், திருவள்ளுவர் முதலிய பெரும் புலவராலேயே தம் அனைவரிலும் மிகச் சிறந்த வராகக் கருதப்பட்ட ஒளவைப் பிராட்டியையே மிகவும் விசேஷ மாக எடுத்துச் சொல்லக்கூடும். ' தமிழ் காட்டின் மற்றச் செல்வங்களை யெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஒளவையின் நூல்களே இழந்து விடப் பிரியமா?' என்று கம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், மற்றச் செல்வங்களை யெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீண்டும் சமைத்துக் கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்படமாட்டோம். அது மீண்டும் சமைத்துக் கொள்ள முடியாத தனிப் பெருஞ் செல்வம் ' என்று நாம் மறுமொழி உரைக்கக் கடமைப் பட்டிருக்கிருேம். தமிழ் நாட்டு நாகரிகத்துக்கு இத்தனே பெரும் செல்வமாகவும், இத்தனே ஒளி சான்ற வாடா விளக்காகவும் தனிப் பேரடையாளமாகவும் தமிழ் மாதொருத்தியின் நூல்கள் விளங்குவது நமது காட்டு ஸ்திரீகளுக்குப் பெரு மகிழ்ச்சி தரத்தக்கதொரு செய்தியன்ருே ? இஃது தமிழ் ஸ்திரீகளுக்கு வெறுமே புகழ் விளைவிப்பது மாத் திரமன்று. அவர்களுக்கு கிரமமான காவலுமாகும். ஒளவை யார் பிறந்த காட்டு மாதரை, ஒளவையார் இனத்து மாதரை, ஆண் மக்களைக் காட்டிலும் அறிவிலே குறைந்த கூட்டத்தா ரென்று வாய் கூசாமல் எவனும் சொல்லத் துணிய மாட்டான். மற்ற தேசங்களில், திருஷ்டாந்தமாக இங்கிலாந்து தேசத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அங்கே ஆண் மக்களுக்கு சமான மான உரிமைகளே பெண்களுக்குக்கொடுப்பது தகாதென்று வாதம் பண்ணுகிற ககதியார், மாதர்கள் இயற்கையிலேயே ஆண் மக்களைக் காட்டிலும் அறிவில் குறைந்தவர்களென்றும், ஆதலால் வீட்டுக் காரியங்களுக்கே அவர்கள் தகுதியுடையோராவாரல்லாது அறிவுவன்மையால் நடத்த வேண்டிய நாட்டுப் பொதுக் காரியங் களே கிர்வகிக்க அவர்களுக்கு திறமை கிடையாதென்றும் தர்க்கிக்கு மிடத்தே, அதற்கு ஒரு ஸாகூஜியுமாக, “ ஆண் மக்களின்