பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் காட்டு நாகரிகம் 103 எனவே, கைம்மாறு கருதாமல் பிறருக்கு எவ்விதத்திலேனும் செய்யப்படும் கஷ்ட நிவாரணங்களும் அனுகூலச் செயல்களும் ஈகை எனப்படும். இதுவே மனிதனுக்கு இவ்வுலகத்தில் அறம், அல்லது தர்மம், அல்லது கடமையாம். இனி, தியசெயல்கள் செய்யாதபடி, எவ்வகைப்பட்ட அறிவு முயற்சியாலேனும் சரீர முயற்சியாலேனும் சேகரிக்கப்படும் உணவு, துணி முதலிய அவசியப் பண்டங்களும், குதிரை வண்டிகள், ஆபரணங்கள், வாத்தியங்கள், பதுமைகள் முதலிய செளக்கிய வஸ்துக்களும், இவற்றை அனுபவிப்பதற்குச் சாதனங்களாகிய வீடு, தோட்டம் முதலியனவும், இப் பண்டங்களுக்கெல்லாம் பொதுக் குறியீடும் பிரதியுமாக மனிதரால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கும் பொற் காசு, வெள்ளிக் காசு, காகிதப் பணம் முதலியனவும், செல்வம் அல்லது அர்த்தம் எனப்படும். நற்செயல்களாலே சேர்க் கப்படும் பொருளே இன்பத்தைத் தருவதாகையாலும், தீச்செயல் கள் செய்து சேர்க்கும் பொருள் பலவிதத் துன்பங்களுக்கு ஹேது வாய் விடுமாகையாலும், தீவினைகள் விட்டுச் சேர்ப்பதே பொருள் என்னும் பெயர்க்குரியதென்றும் தீவினைகளாலே சேர்ப்பது துன்பக் களஞ்சியமே யாகுமென்றும் ஒளவையார் குறிப்பிட் டருளினர். இனி இன்பத்துக்கு ஒளவையார் கூறும் இலக்கணமோ நிகரற்ற மாண்புடையது. காதலின்பத்தையே முன்னேர் இன்ப மென்று சிறப்பித்துக் கணக்கிட்டனர். பொருளைச் சேர்ப்பதிலும் அறத்தைச் செய்வதிலும் தனித்தனியே பலவகையான சிறிய சிறிய இன்பங்கள் தோன்றும். ஆயினும், இவை காதலின்பத் துக்குத் துனேக்கருவிகளாவது பற்றியே ஒருவாறு இன்பங்க ளென்று கூறத் தக்கனவாம். உலகத்தில் மனிதர் ருசியான பதார்த்தங்களே உண்டல், நல்ல பாட்டுக்கேட்டல், நல்ல மலர் களே முகர்தல் முதலிய இந்திரிய இன்பங்களே விரும்பி அவற்றை அடையும் பொருட்டு மிகவும் பாடுபடுகிருர்கள். அதிகார இன்பம், புகழின்பம் முதலிய எண்ணற்ற வேறு பல இன்பங்க ளுக்காகவும் உழைக்கிருர்கள். ஆனால், இவையெல்லாம் அற்ப மான இன்பங்களென்று கருதி முன்னேர் இவற்றை இன்பப் பாலிலே சேர்க்கவில்லை. புகழ், அதிகாரம் முதலியவற்றை அறத்