பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 பாரதி தமிழ் துப்பாலிலும், பொருட்பாலிலும் சார்ந்தனவாகக் கணித்தார்கள், இந்திரிய இன்பங்களுக்குள்ளே இனிய பrணங்களையும் கனி களையும் உண்டல், மலர்களே முகர்தல் முதலியன மிகவும் எளி திலே தெவிட்டக் கூடியனவும், வெறுமே சரீர சுகமாத்திரமன்றி ஆத்ம சுகத்துக்கு அதிக உபகார மில்லாதனவு மாதல் பற்றி அவற்றையும் இன்பப் பாலிலே சேர்க்கவில்லை. ' கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும் ஒன்டொடிக் கண்ணேயுள ” என்று திருவள்ளுவர் பாடியிருக்கிரு.ர். ' கண்டல், கேட்டல், உண்டல், மோப்பு, தீண்டுதல் எனும் ஐவகை இந்திரியங்களையும் ஒருங்கே இன்புறுத்தும் இயல்பு ஒளி பொருந்திய வளையணிந்த இப்பெண்ணிடத்தே தானுள்ளது ' என்பது அக்குறளின் பொருள். இதனுடன் உயிருக்கும் மனத் துக்கும் ஆத்மாவுக்கும் சேர இன்பமளிப்பதனால் காதலின்பம் இவ்வுலக இன்பங்களனைத்திலும் தலைமைப்பட்ட தாயிற்று. ஆதலால், நான்கு புருஷார்த்தங்களுள் அதாவது மனிதப் பிறவி எடுத்ததனால் ஒருவன் எய்தக்கூடிய பெரும் பயன்களைக் கணக் கிடப் புகுந்த இடத்து, நம் முன்னேர் காலின்பத்தையே இன்ப மென்னும் பொதுப் பெயரால் சொல்லியிருக்கிருர்கள். இங்ங்னம் இன்பமென்ற பொதுப் பெயரால் சிறப்பித்துக் கூறத்தக்க பெருஞ்சுவைத் தனியின்பம் மனிதனுக்குக் காதலின்பமே யாகும் என்பதையும், அவ்வின்பத்தை தவறுதலின்றி, நுகர்தற்குரிய வழியின்ன தென்பதையும் ஒளவைப் பிராட்டியார் சால இனிய தமிழ் சொற்களிலே காட்டி அருள் புரிந்திருக்கிரு.ர். ஒருவன் ஒருத்தியினிடத்திலும், ஒருத்தி ஒருவனிடத்திலும் மனத்தாலும், வாக்காலும், செய்கையாலும், கற்பு நெறி தவருமல் கித்தியப் பற்றுதலுடையோராய் மன ஒருமை யெய்தித் தம்முள் ஆதரவுற்றுத் துய்க்கும் இன்பமே இன்பமெனத் தகும் என்று ஒளவையார் கூறுகிருர். இனி, முக்தியாவது யாதெனில் :- கடவுளே உள்ளத்திலிருத்தி தானென்ற கொள்கையை மாற்றி ஈச போதத்தை யெய்தி, மேற் கூறிய மூன்று புருஷார்த்தங்களிலும் பொறுப்பு நீங்கியிருப்பதே முக்தி. இந்த முக்தி பெறுவதல்ை ஒருவன் மற்ற மூன்று புரு