பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஜாதிக் குழப்பம் இந்தியாவில் விசேஷக் கஷ்டங்கள் இரண்டு. பணமில்லாதது ஒன்று. ஜாதிக் குழப்பம் இரண்டாவது. பணக்கஷ்டமாவது வயிற்றுக்குப் போதிய ஆஹாரமில்லாத கொடுமை. இந்தத் துன்பத்துக்கு முக்கியமான நிவர்த்தி யாதென்ருல் கமது தேசத். தில் விளைந்து, உணவுக்குப் பயன்படக் கூடிய தான்யங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி யாகாமல் தடுத்து விடவேண்டும். இங்கிலாந்து முதலிய சில தேசங்களில் காலையில் எழுந்தால் ஆஹாரத்துக்கு மீன் தென் அமெரிக்காவிலிருந்து வரும்படியாக இருக்கும். வெண்ணெய் ஆஸ்டிரேலியாவிலிருந்து வரும்படியாக இருக்கும். இக்காட்டினரின் கிலேமை அப்படியில்லை. இங்கு பூமி நம்முடைய ஜனங்களுக்கெல்லாம் போதிய ஆஹாரம் கொடுக் கிறது; ஆதலால், ஏற்கெனெவே போதிய அளவு பணம் குவித்து வைத்திருந்தாலன்றி உணவுக்கு வழி கிடையாது என்ற கிலேமை நம்முடைய தேசத்திற்கில்லை. உணவுத் தான்யங்களின் ஏற்று மதியை எந்த நிமிஷத்தில் கிறுத்தி விடுகிருேமோ, அந்த கிமிஷம் முதல் நம்முடைய ஜனங்களுக்குத் தட்டில்லாமல் யதேஷ்டமான ஆஹாரம் கிடைத்துக் கொண்டு வரும். இந்த விஷயத்தில் ஐயம டைய வேண்டினல், நம்முடைய வியாபாரிகள் வெறுமே தம்மு டைய வயிறு கிரப்புவது மாத்திரம் குறியாகக் கொள்ளாமல் தமக்கும் லாபம் வரும்படியாகவும் பொது ஜனங்களுக்கும் கஷ்டம் ஏற்படாமலும் செய்தற்குரிய வியாபார முறைகளைக் கைக்கொள் ளும்படி அவர்களே வற்புறுத்த வேண்டும். இங்ங்னம் நம்முடைய நாட்டிலேயே தான்யங்களை நிறுத்திக் கொண்டு, அந்தந்த ஊரில் மிக எளியோராக இருப்போரிடம் தக்க வேலைகள் வாங்கிக் கொண்டு அவர்களுக்கு உணவு வேண்டிய மட்டும் கொடுத்துவர ஏற்பாடு செய்தல் மிகவும் எளிது. பூரி (ஜகங்காதம்) பிரதேசங்களில் மிகவும் கொடிய பஞ்சம் இந்த கூடிணத்தில் நடைபெற்று வருகிறது. நம் காட்டில் ராஜாக்