பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 பாரதி தமிழ் களும், சாஸ்திரிகளும், பெரிய மிராசுதார்களும், ஸாஹ-கார்க ளும், வக்கீல்களும், பெரிய பெரிய உத்யோகஸ்தர்களும், வயிறு கொழுக்க, விலாப்புடைக்க, அஜீர்ணமுண்டாகும்படி ஆஹாரங் களைத் தம்முள் திணித்துக் கொண்டிருக்கையிலே உலகத்தில் வேறெந்த காட்டிலும் இல்லாதபடி இந்தியாவில் மட்டும், தீராத மாருத பஞ்சம் தோன்றி ஜனங்களை அழிக்கிற கொடுமையைத் தீர்க்க வழிதேட வேண்டிய யோசனை அவர்களுடைய புத்திக்குச் சற்றேனும் புலப்படாதிருப்பதை எண்ணுந்தோறும் எனக்கு மிகுந்த வருத்தமுண்டாகிறது. இத்தனே கஷ்டத்துக்கிடையே ஜாதிக் கொடுமை ஒரு புறத்தே தொல்லைப் படுத்துகிறது. பெரும்பாலும் தாழ்ந்த ஜாதியார்களே அதிக ஏழைகளாக இருக்கிருர்களென்பது மறுக்க முடியாத விஷயம். உழைப்பும் அவர்களுக்குத்தான் அதிகம். அதிக உழைப்பு கடத்திவரும் வகுப் பினருக்கு அதிக வலுவு தேவைப்படும். அதிே உலக முழுதிலு மிருக்கிறது. எனினும், கம்முடைய தேசத்தைப் போல் இத்தனை மோசமான நிலைமை வேறெங்குமில்லை. இந்த ஊரில் (கடையத்தில்) ஒரு செல்வர் வீட்டு விசேஷ மொன்றுக்காக சங்கரகயினர் கோவிலிலிருந்து கோவில் யானையை இங்கு கொண்டு வந்திருக்கிருர்கள். அது ஆண் யானே; 18 வயதுள்ள குட்டி. அது மிகவும் துஷ்ட யானே யென்று பெயர் கேட்டிருப்பதால், அதை இவ்வூரில் அனேக ஜனங்கள் திரள் திரளாகச் சென்று பார்க்கிருர்கள். இன்று காலை நானும் என் நண்பரொருவருமாக இந்த யானையைப் பார்க்கச் சென்ருேம். அந்த யானையைப் பற்றிய முக்கிய விசேஷம் யாதெனில், இதற்கு மாவுத்தர்களாக இரண்டு ப்ராமணப் பிள்ளைகளும், சைவ ஒது வார் (குருக்கள்) வம்சத்தைச் சேர்ந்த ஒருவரும் வேலை பார்க்கி ருர்கள். ஸாதாரணமாக, பாவுத்தர் வேலை செய்ய மஹம்மதியர் களும் ஹிந்துக்களில் தணிந்த ஜாதியாருமே ஏற்படுவது வழக்கம். இந்த யானைக்கு ப்ராமண மாவுத்தர் கிடைத்திருக்கிருர்கள். மேற்படி ப்ராமண மாவுத்தரில் ஒருவனிடம் நான் இந்த யானேயின் குணங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். கான் நதிக்கு போய்க் கொண்டிருக்கையில் அவன் அந்த யானையை கிஷ்கருணையாக அடித்துக்கொண்டிருக்க நான் பார்த்தேனதலால்,