பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பழைய உலகம் இந்த உலகம் மிகப் பழமையானது. இதன் வடிவம் புதிதாகத் தோன்றும். இயற்கை பழமை , தனி வேப்பமரம் சாகும்; ஒற்றை வேப்பமரம் பிறக்கும்; வேம்புக்குலம் எங்காளும் உண்டு. பூமியுள்ளவரை வெயில் என்றைக்கும் இப்படியே அடிக்கும். மழை, காற்று. பிறப்பு, வளர்ப்பு, நோய், தீர்வு, கட்டு, விடுதலை, தீமை, இன்பம், துன்பம், பக்தி, மறதி, கரைப்பு, துயரம், கலக்கம்-எல்லாம் எக்காலத்திலுமுண்டு. கருவிகள் மாறுபடுகின்றன ; இயற்கை செல்கின்றது. ஏன் சொல்லுகிறேன், தெரியுமா? நமக்கெல்லாம் தெரியாமல் ஆகாசத் திலிருந்து புதிய நாகரிகம் ஒன்று குதித்திருப்பதாகச் சில பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் சொல்லிக் கொள்ளுகிருர்கள். நான் அதை நம்பவில்லை. உலகமே பழைய உலகம். ஏழை பாடு எப்போதும் கஷ்டம். பணக்காரனுக்குப் பலவித செளக்கியங்களுண்டு. கோயில் காத்தவனுக்குப் பஞ்சமில்லை. சாமிகள், முக்கால்வாசிக்குக் குறையாமல் பாதி கல் பாதி சாமி. முழுச்சாமி இருந்து கோயில் கடத்தினால், உடனே கிருதயுகம் பிறந்து விடாதா? எந்த தேசத்திலும் எந்தக் காலத்திலும் இதே கதைதான் கடந்து வருகிறது. எவன் கை ஏறியிருக்கிறதோ அவன் பாடு கோலாஹலம். ஏழைக்குக் கஷ்டம். பணக்காரன் ஏழை என்ற பிரிவு முன் காலத்தில் எப்படி உண்டாயிற்று ? குடி, படை என்ற இரண்டாக மனித ஜாதி ஏன் பிரிந்தது? எல்லாரும் ஒன்று கூடி உழுது பயிரிட்டுப் பிழைக்கும் கிராமத்தில் வேற்றுமை எந்தக் காரணத்தினல் வங் தது ? இவை யெல்லாம் எஜமானன் விசாரணைகள். இந்த நிமிஷம் லெளகர்யமில்லை. ஏழை பணக்காரன் விஷயத்தை மாத்திரம் இப்போது கருதுவோம்.