பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. சுப்பிரமணிய பாரதியார் (1882–1921) (சுருக்கமான வாழ்க்கை வரலாறு) தமிழிலே ஒரு பெரிய மறுமலர்ச்சியையும் தமிழருக்கு ஒரு புதிய விழிப்பையும் உண்டாக்கியவர் பாரதியார். இவருடைய தந்தையான சின்னசாமி ஐயருக்கு எட்டையபுரம் சமஸ்தானத் தில் செல்வாக்கு நிறைய இருந்தது. அதனால் பாரதியார் இளமையிலேயே சமஸ்தானத்து வித்வான்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். இளமையிலேயே கவிபாடி பாரதி என்ற பட்டமும் பெற்ருர். பாரதியார் முதலில் திருநெல்வேலி ஹிந்து கலாசாலையில் கல்வி கற்ருர். இவருக்குத் தம் 14-ஆம் வயதிலேயே திருமணம் நடந்தது. ஆனால் அந்தக் காலத்திலேயே சின்னசாமி ஐயருடைய செல்வகிலே சீர்குலேந்தது. பாரதியாருக்குத் திருமணமான ஓராண்டிற்குள் தங்தையும் காலமானர். அதனல் இவர் குடும்பம் வாடியது. இங்கிலேயில் இவர் காசிக்குச் சென்று தம் அத்தை வீட்டில் இர ண் டு ஆண்டுகள் தங்கினர். ஆங்கிலத்தோடு ஹிந்தியும் சமஸ்கிருதமும் படிக்க இவருக்கு அங்கே வாய்ப்புக் கிடைத்தது. கல்கத்தா பல்கலைக்கழக பிரவேசப் பரீட்சைக்கும் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ருர். தேசிய கவியாக மாறுவதற்கு வேண்டிய உணர்ச்சிகளைப் பெறக் காசி வாழ்க்கையே பாரதியாருக்கு முக்கியமாக உதவிற்று என்று கூறலாம். வங்காளத்தில் ஓங்கி வளர்ந்த விடுதலை உணர்ச்சி இவருடைய உள்ளத்தில் பெரிதும் பதிந்து விட்டது. 1902-ல் இவர் எட்டயபுரம் திரும்பி ஜமீந்தாரிடம் சிறிது காலம் வேலை பார்த்தார். ஆனல் சுதந்திர உணர்ச்சி மிக்க இவருக்கு அவ்வாழ்க்கை பிடிக்கவில்லை. 1904-ல் மதுரைக்குச் சென்று ஒரு பள்ளியில் மூன்று மாதம் தமிழாசிரியராக இருந்தார். அந்தப் பணியும் அவருக்கு உகந்ததாக இருக்கவில்லை.