பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மிருகங்களும் பகூஜிகளும் ' கொல்லா விரதம் குவலய மெல்லாமோங்க எல்லார்க்கும் சொல்லுவதென் இச்சை பராபரமே ' - தாயுமானவர். லெளகிக விஷயங்களில் மஹா கிபுணரும், சிறந்த வேதாந்தப் பயிற்சியுடையவருமாகிய என் கண்பரொருவர் (அவருக்கு 'கோபால பிள்ளை' என்ற புனேப் பெயர் சூட்டுகிறேன்) இன்று பகல் நேரத்தில் என்னிடம் வந்து சம்பாஷணை செய்து கொண்டி ருந்தார். அவர் என்னிடம் சொன்னர் :-" நீங்கள் பத்திரிகைக்கு விஷயங்கள் எழுதுவதில், எந்த வகுப்பினருக்கும் மனவருத்தம் நேரிடாதபடியாக எழுதுவதே நன்று. இன் சொலால் அன்றி இரு நீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே." பிறருக்குக் கோபம் ஏற்படாத வகையில் எவ்வளவோ எழுத இடமிருக்கிறது. உலகத்தைச் சீர்திருத்த வேண்டுமென்பதும், உலகத்தாருக்கு உங்களால் இயன்றவரை கன்மை செய்ய வேண்டுமென்பதுமே, நீங்கள் பத்திரிகைக்கு வியாசங்கள் எழுது வதின் நோக்கம். அந்த நோக்கம் விரைவில் கிறைவேற வேண்டு மால்ை, நம்முடைய கொள்கைகளைச் சிறிதேனும் கோபமில்லா மலும், ஆத்திரப்படாமலும், பிறர் யாவரேயாயினும் அவர் மனம் சிறிதேனும் நோவாமலும், முற்றிலும் இன் சொற்களால் எழுது வதே சிறந்த வழியாகும் ' என்ருர். இது கேட்டு நான் :-"மிகவும் நன்ருகச் சொன்னிர்கள். இதுவே என் சொந்த அபிப்பிராயமும். ஆனலும், ஸ்திரீகளின் கிலேமை, கீழ்ச் சாதியாரின் கிலேமை, ஏழைகளின் நிலைமை, மிருக பகவிகளின் கிலேமை-இவற்றைக் குறித்து எழுதும்போது, மேற்படி மாதர் முதலான எளிய வகுப்பினருக்குச் சிறிதேனும் ஈரம் இரக்கமின்றிக் கொடுமைகள் செய்யும் மக்களின் மீது சில சமயங்களில் என்னையும் மீறி எனக்குக் கோபம் பிறந்து