பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பாரதி தமிழ் விடுகிறது. ஆனால், இந்தக் கோபத்தையும் கூடிய சீக்கிரத்தில் முயற்சி பண்ணி அடக்கிவிடுகிறேன். நீங்கள் சொன்ன விதியையே எப்போதும் பரிபூரணமாக அனுஷ்டிக்க முயலுகின் றேன். ஏனென்ருல், கோபச் சொற்கள் நமது நோக்கத்தின் கிறைவேறுதலுக்கே, நீங்கள் குறிப்பட்டவாறு, தடையாகி முறிகின்றன. ஆடு மாடு தின்போரை காம் வாய்க்கு வந்தபடி வைதால், அதனின்றும் அவர்களுக்கு நம்மீது கோபம் அதிகப் படுமே யொழிய, அவர்கள் மாம்ஸ் பrணத்தை நிறுத்த வழி யுண்டாகாது. தக்க கியாயங்கள் காட்டுவதும் அவர்களுடைய காருண்யத்தை நாம் கெஞ்சுவதுமே மனிதர் நாம் சொல்லும் ககூதியை அங்கீகரிக்கும்படி செய்யும் உபாயங்களாம் ' என்றேன். அப்போது என் நண்பர் :- மிருகங்களைக் கொன்று தின்னும் அகியாயத்தை நினைக்கும்போது, எனக்கும் அடக்கமுடியாத வயிற்றெரிச்சல் உண்டாகத்தான் செய்கிறது. அவற்றை வெட் டும்போது, நீங்கள் கேரில் பார்த்திருக்கிறீர்களா ? ஆட்டை வெட்டப்போகும் ஸ்மயத்தில், அது தலையை அங்குமிங்கும் அசைத்து விட்டால் வெட்டு சரியாக விழாதென்பதை உத்தேசித்து, அதன் வாய்க்கெதிரே பச்சைக் குழையைக் காட்டு கின்ருர்கள். அது குழையைத் தின்பதற்காக முகத்தை நேரே நீட்டும் சமயத்தில் திடீரென்று ஒரே வெட்டு வெட்டி அதன் தலையைத் துண்டித்து விடுகிருர்கள். அங்ங்னம் வெட்டும்போது பார்த்தால், வெட்டுவோனிடம் நமக்கு மிகுந்த குரோதம் உண் டாகத் தான் செய்கிறது. அவனே கூடிமிப்பது கஷ்டமாகத்தான் இருக்கிறது. இத்தனே சுலபமாக ஒரு ஆட்ட்ை வெட்டிக்கொன்று தீர்த்து விடுகிருர்கள். ஒரு ஆட்டிற்கு உயிர் அளிக்க இவர் களால் முடியுமா ? 'சில தினங்களுக்கு முன்பு, சங்கராயினர் கோயிலுக்கருகே ஒரு கிராமத்திற்குப் போயிருந்தேன். அங்கே ஒரு மாடன் கோயிலில் பெரிய ஜனத்திரள் கூடி பூசை போட்டுக் கொண்டி ருந்தார்கள். அந்த மாடசாமி யார் தெரியுமா? அந்த கிராமத்தில் பல வருஷங்களின் முன்னே ஒரு மறவன் இருந்தானம். அவன் கொலை களவு முதலிய செயல்களில் மிகுந்த வீரனாகவும் ஏழை வளியோர் மீது மாத்திரம் கிருபையுடையவனாகவும் இருந்தானம்.