பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 பாரதி தமிழ் 'இதே மாதிரி சென்னைப் பட்டணத்திற்கருகே ஒரு கிராமத் தில் ஒரு அம்மன் கோயில் இருக்கிறது. இன்னும் நாடு முழுமை யிலும் இம் மாதிரியான கோயில்கள் எத்தனையோ இருக்கின்றன. இவற்றில் நடக்கும் கொலைகளைத் தடுக்கும்படி அந்தக் கோயில் தர்மகர்த்தாக்களையும், பொதுஜனத் தலைவர்களையும் காலில் விழுந்து கேட்டுக் கொள்வதாகப் பத்திரிகைக்கு எழுதப் போகி றேன். ' கோபச் சொற்கள் சொல்வதிலும், வைவதிலும் காரியம் இல்லை' என்று நீங்கள் சொல்லுகிறீர்களே ? நாம் என்ன செய்வோம்? ' என்றேன். இங்ங்னம் நெடுநேரம் ஜீவகாசத்தின் அகியாயத்தையும் அதல்ை மனிதருக்குண்டாகும் எண்ணற்ற பாவங்களையும் அவற்ருல் உண்டாகும் நோய் சாவுகளையும் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அந்த சம்பாஷணை முழுவதையும் இங்கு எழுத இடமில்லை : . எனினும், நான் கோபால பிள்ளையிடம் வாக்குக் கொடுத்தபடியே இங்கு வேண்டுதல் செய்கிறேன் : " தமிழ் நாட்டு ஜனத் தலைவர்களே, உங்கள் காலில் வீழ்ந்து கோடி தரம் நமஸ்காரம் செய்கிறேன். மாம்ஸ் பrணத்தை கிறுத்துவதற்கு வழி செய்யுங்கள்.”