பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் 13む மேலும் இவர் தமக்குத் தாய்மொழி தெரியாதென்ற செய்தியை வங்கப் பத்திரிகைக்கு ஏன் எழுதப் போனர் என்பது எனக்கு அர்த்தமாகவில்லை. ஜப்பானியர், சீனர், நார்வேக்காரர் முதலிய உலகத்து ஜாதியாரெல்லாம் நம்மை அறிவிலும் சாஸ் திரங்களிலும் பாஷைத் திறமையிலும் தாழ்வென்று நினைத்து வந்தார்கள். இப்போதுதான் ஹிந்து ஜாதியாராகிய நாம் காட்டு மனிதரில்லை, வாலில்லாத குரங்குகளில்லை, கமக்குப் பாஷைகள் இருக்கின்றன; நமக்குள்ளே சாஸ்திர விற்பன்னர்கள் இருக் கிருர்கள்; கவிகள் இருக்கிருர்கள் என்று நம்மவரிலே சிலர் வெளி யுலகத்தார் தெரிந்து கொள்ளும்படி செய்து வருகிருர்கள். இதற்குள்ளே தமிழ் வகுப்பு மற்ற ஹிந்துஸ்தான வகுப்புக்களைக் காட்டிலும் குறைவுபட்டதென்று நம்மில் சிலர் முரசடிக்கத் தொடங்குவது எனக்கு கைப்புண்டாக்குகிறது. என்னுடைய சொந்த அபிப்பிராயத்தைக் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். உலகத்திலுள்ள ஜாதிய்ார்களிலே ஹிந்து ஜாதி அறிவுத் திறமையில் மேம்பட்டது. இந்த ஹிந்து ஜாதிக்குத் தமிழராகிய நாம் சிகரம்போல் விளங்குகிருேம். எனக்கு காலந்து பாஷை களிலே பழக்கமுண்டு. இவற்றிலே தமிழைப் போல வலிமையும், திறமையும், உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேருென்றுமே யில்லை. இந்த கிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவு, கீர்த்தி வெளி யுலகத்திலே பரவாமல் இருப்பதை நான் அறிவேன். போன கிமிஷம் தமிழ் ஜாதியின் அறிவொளி சற்றே மங்கியிருந்ததையும் நானறிவேன். ஆனல் போன கிமிஷம் போய்த் தொலைந்தது. இந்த கிமிஷம் ஸத்யமில்லை. காளை வரப்போவது ஸத்யம். மிகவும் விரைவிலே தமிழின் ஒளி உலக முழுவதிலும் பரவா விட்டால் என் பெயரை மாற்றி அழையுங்கள். அதுவரையில் இங்குப் பண்டிதர்களாக இருப்போர் தமக்குத் தமிழ்ச் சொல் நேரே வராவிட்டால் வாயை மூடிக்கொண்டு வெறுமே இருக்க வேண்டும். தமிழைப் பிறர் இழிவாகக் கருதும்படியான வார்த்தைகள் சொல்லாதிருக்க வேண்டும், இவ்வளவுதான் என்னுடைய வேண்டுகோள்.