பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvi பாரதி தமிழ் அதே ஆண்டில் பாரதியார் சென்னை சென்று, சுதேசமித்திரன் செய்தித்தாளுக்குத் துணையாசிரியரானர். அந்த வேலையில் இருந்து கொண்டே சக்கரவர்த்தினி என்ற ஒரு திங்கள் இதழை நடத்தினர். அத்துடன் திருவல்லிக்கேணியில் இருந்த மண்டையம் திருமலாச்சாரியார் தொடங்கிய இந்தியா என்ற வார இதழுக்கு ஆசிரியராகவும் ஆனர். தமது உள்ளத்திலே குமுறிக் கொண்டி ருந்த தேசபக்தி உணர்ச்சியை தமிழ் நாட்டில் பரவச் செய்ய இந்தியா வார இதழ் இவருக்கு நல்ல கருவியாக அமைந்தது. குரத்தில் 1907 டிசம்பரில் நடைபெற்ற காங்கிரசில் பாரதியார் தீவிரவாதிகளே ஆதரித்தார். திலகரின் கொள்கைகளில் பாரதி யாருக்குப் பற்று மிகுந்தது. திலகரைப் போற்றியும், கிதானக் கட்சியாரை எள்ளி நகையாடியும் பாரதியார் பாடல்கள் எழுத லானர். சென்னே திரும்பியதும் இந்தியா இதழில் சட்ட வரம்புகளைப் பொருட்படுத்தாது பாரதியார் எழுதத் தொடங்கி விட்டார். அதனால் அதை வெளியிட்டவர்களின் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தொடங்கிற்று. பாரதியார் இரகசியமாகப் புதுச்சேரி போய்ச் சேர்ந்தார். அவர் அங்குச் சேர்ந்த ஒரு மாதத் திற்குள் இந்தியா வாரஇதழ் புதுச்சேரியிலிருந்து மீண்டும் வெளியாகத் தொடங்கிற்று. ஆனல் அது பிரிட்டிஷ் இந்தியாவிற் குள் வரக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட பிறகு அதை கிறுத்தவேண்டிய கிலேமை ஏற்பட்டது. 1908 முதல் 1918 வரை பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தார். அப்பொழுது இவருக்குத் தம் குடும்பத்தை கடத்தவே பல சமயங் களில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. என்ருலும் அந்தக் காலத்தில் தான் இவருடைய இலக்கியப்பணி மிகவும் உன்னத கிலேயை அடைந்தது. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு என்பவை அங்கே எழுதப்பெற்ற மிகச்சிறந்த நூல்களாகும். பாரதியாருடைய கவிதையும், உரைநடையும். புதுச்சேரியில் மெருகேறி முழு வளர்ச்சியடைந்தன என்று பொதுவாகக் கூறலாம். பாரதியாருடைய புதுச்சேரி வாழ்க்கை எல்லா வகைகளிலும் துன்பம் மிகுந்து இருந்ததாக யாரும் கினேக்கக்கூடாது. அவருக்கு இரண்டு பெரிய மகான்களின் தொடர்பும் நட்பும்