பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாரதி தமிழ் முக்தன் பண்டார வழியிலே சென்ருலும் செல்லக்கூடும். ஆனல் அதுவே மார்க்கமென்று கினைத்துவிடக்கூடாது. ஜனகன் ஜீவன் முக்திபெற்று ராஜ்யமாண்டான். அர்ஜுனனும், அப்படியே ரிஷிகளெல்லாரும், பெண்டுபிள்ளைகளுடன் சுகமாக வாழ்ந்தர்ர் கள். விடுதலை பெற்றவர் எந்தத் தொழிலைச் செய்தாலும் செய் வார்கள். ஆனால் அந்தரங்க கம்பிக்கை தெய்வ மொன்றினிடத் தேயே செலுத்தி வாழ்வார்கள். ' எத்தொழிலைச் செய்தாலும் எதவத்தைப்பட்டாலும் முக்தர் மனமிருக்கு மோனத்தே' என்பது முன்னேர் வாக்கு. பரனே கினேந்து முன் மூன்றையும் விட்டுவிடுதல் இன்பமென்று ஒளவை கூறிள்ை. பற்று விட்டிருப்பதே விடுதலே. உள்ளத் துறவே துறவு. உள்ளத் துறவுடைய மனிதனே நாம் என்ன அடையாளத்தாலே கண்டு பிடிக்கலாம் ? பக்தி முதிர்ச்சிக்கு எது தவருத லக்ஷணம் ? " அஞ்சாதே 1’ என்றது வேதம். பயம் நீங்கியிருப்பதே விடுத லேக்கு லக்ஷணம். ஒருவன் உண்மையாகவே தெய்வத்தை கம்பினை, வீணுக்குச் சொல்லுகிரு ைஎன்பதை அறிய வேண்டு மானல் ஆபத்து வேளையிலே பார்க்க வேண்டும். ஆபத்து நேரும் போது நெஞ்சு நடுங்காமலிருப்பவன் ஞானி, பக்தன், முக்தன், மரணத்துக் கஞ்சாதவன், தெய்வத்தை உண்மையாகச் சரண மடைந்தவன். தெய்வத்தை நம்பினல் தீமை நமக்கு வாராதென் பதை ப்ரத்யr ஞானமாகக் கொண்டு ஜீவன் முக்தர் எந்தப் பதவியிலிருந்தபோதிலும் நிகரற்ற வீரராக விளங்குவார்.