பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நாகரிகத்தின் ஊற்று ப்ரான்ஸ் தேசத்து முதல் மந்திரி ஸ்தானத்திலிருந்தவராகிய பூரீமான் க்ளெமான்ஸோ சில தினங்களாக இந்தியாவில் ஸஞ்சாரம் பண்ணிவரும் செய்தி நம் நேயர்களுக்குத் தெரிந்ததேயாம். இவருக்குச் சில நாட்களின் முன்னே பம்பாயில் கடந்த விருந்தின் போது இவர் செய்த ப்ரஸங்கத்தில் பின்வரும் ஸாரமயமான வாக்யம் காணப்படுகிறது: " ப்ரான்ஸிற்காக இரத்தம் சிந்திய மக்களைப் பெற்ற தேசத்தை வந்து பார்ப்பது எனக்குப் பெருமையுண்டாக்குகிறது. ப்ரெஞ்சு குடும்பங்களுடன் இந்தியச் சிப்பாய்களிலிந்தபோது நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய மரியாதையும் அன்பும் ப்ரான்ஸ் தேசத்தாரை மோஹிக்கும்படிச் செய்தன. கீழ்த் திசையானது நாகரிகத்தில் குறைந்ததன்று. அன்பு, மானு வீகம் என்பவற்றிற்குரிய மஹோங்கத லக்ஷயங்களெல்லாம் கீழ்த் திசையிலிருந்து வந்தன. மேற்குத் திசையார் அவற்றை ஸ்வீகரித்துத் தம்முடைய லகன்யங்களாகச் செய்துகொண்டனர். எனவே, உங்களைக் காட்டிலும் உயர்ந்த நாகரிகத்தின் ப்ரதிநிதி யாக என்னே மதித்து நான் உங்களோடு பேசவில்லை. (இந்தியா வாகிய) நாகரிகத்தின் ஊற்றை நோக்கி நீஞ்சி வந்தவகை என்னே மதிக்கிறேன் ' என்ருர். . இவர் யார் ? ப்ரான்ஸ் தேசத்து முதல் மந்திரியாக இருந்து அதிஸமீப காலத்தில் விலகியவர். வெறும் இல்க்கியப் படிப்பு மட்டும் உடையவரல்லர். மிகவும் பழுத்த லெளகிகத் தேர்ச் சியும், ஐரோப்பிய ராஜ தந்திரத்தில் மஹா கீர்த்தி வாய்ந்த நிபுணத் தன்மையுமுடையவர். இவரே பத்து வருஷங்களுக்கு முன் இப்படிப் பேசியிருக்க மாட்டார். கினைத்துக்கூட் இருக்க மாட்டார். ஐரோப்பிய நாகரிகமே மேம்பட்ட தென்று கினைத் திருப்பார். இன்றைக்கு இந்தியாவை வந்து கூடியவரை கிஷ் பகடிபாதமான, தெளிந்த விழிகளுடன் பார்க்கும்போது, இந்த ur–9