பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாரதி தமிழ் எண்ணம் இவர்மீது வற்புறுத்தப்படுகிறது. இவருடைய வசனத்தை கன்ருக ஊன்றிப் படிக்கும்படி நம்மவர்களை வேண்டு கிறேன். இவர் என்ன சொல்லுகிருர் ? ஐரோப்பிய நாகரிகத்தின் பரம லசங்யங்கள் அவர்கள் எதிர்காலத்தில் நிறைவேற்றக் கருதும் தர்மங்கள், ஐரோப்பாவுக்கு சொந்தமல்லவென்றும் அவை கீழ்த்திசையிலிருந்தே கிடைத்தனவென்றும் சொல்லுகிருர் நாமே ஐரோப்பாவுக்கு லகன்டிய தானம் செய்தோமென்றும் நம்முத வியின்றி அவர்கள் இன்னும் பச்சை குத்திய நிர்வாணமான காட்டு ஜனங்களாகவே யிருந்திருப்பார்களென்றும் அங்கீகரித்துக் கொள்ளுகிருர். ஆசியாவிலிருந்து நாகரிகம் ஐரோப்பாவுக்குச் சென்றது. ஆசியாவின் நாகரிகத்துக்கு மூலஸ்தானம் நமது பாரத வர்ஷம். ஆனல் முற்காலத்தில் நாம் எத்தனே உயர்ந்த கிலேமையிலிருந்து உலகத்திற்கு எத்தனே அரிய நலங்கள் செய்த போதிலும் இப்போது நாம் சரியான நிலைமையில்லாதிருப்போ மால்ை நமது பண்டைக்காலப் பெருமை யாருக்கும் கினைப்பிராது. இன்று மீண்டும் நமது தேசம் அபூர்வமான ஞானத் திகழ்ச்சியும் சக்திப் பெருக்கமும் உடையதாய்த் தலைதுாக்கி நிற்பதே நமது பெருமையைக் குறித்து நீமான் க்ளெமான்ஸோ முதலியவர்கள் மேலே காட்டியபடி பூஷித்துப் பேசக் காரணமாகிறது. எனினும் நாம் உலகத்திற்குப் புது வழி காட்டத் தகுதியுடையோ மென்பதை ருஜூப்படுத்தியிருக்கிருேம் அன்றி இன்னும் அந்த ஸ்தானத்தில் நாம் உறுதிபெறவில்லை. ' மேற்குத் திசையிலிருப் பதுபோலவே இங்கும் மனிதர், பரஸ்பரம் அன்புசெலுத்தும்படி விதித்த கடவுளின் கட்டளையை மறந்து, ஒருவருக்கொருவர் விரோதிப்பதையும் கொலைபுரிவதையும் கண்டு நான் வ்யஸனப் படுகிறேன்' என்று பூநீக்ளெமான்ஸோவே சொல்லியிருக்கிருர், ஆனல் இந்த ஸமயத்தில் இந்தியாவில் பரவிவரும் ஸாத்வீக தர்மக் காற்றைச் சுவாஸ்யாமலிருப்பாரானல், நீ க்ளெமான்ஸோவின் வாக்கில் இந்த வார்த்தை உதித்தேயிராதென்று நான் நிச்சயமாகக் கூறுவேன். இப்போது பூரீ க்ளெமான்ஸோ பாரிஸ் நகரத்தி லிருந்தால் அங்கு மறுபடி வீசிவரும் ஜெர்மானிய விரோதக் காற்று இவரையும் தாக்கி இவருடைய புத்தி ஸாத்வீக நெறி களிலே செல்ல இடங்கொடுத்திராது. எனவே, இந்தியா, அன்பு