பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. வாசக ஞானம் வியாபாரம், கைத்தொழில், ராஜாங்கச் சீர்திருத்தம் ஜன. சமூகத் திருத்தம் முதலிய லெளகிக விவகாரங்கள் எல்லாவற் றிலும், மனிதர் ஏறக்குறைய எல்லாத் திட்டங்களையும் உணர்ந்து முடித்து விட்டனர். ஒரு துறை அல்லது ஒரு இலாக காவைப் பற்றிய ஸஅக,ம தந்திரங்களை மற்ருெரு துறையிற் பயிற்சி கொண்டோர் அறியாதிருக்கலாம். ஆனால், அந்தந்த நெறியிற் தக்க பயிற்சி கொண்ட புத்திமான்களுக்கு அதனை யதனைப் பற்றிய நுட்பங்கள் முழுமையும் ஏறக்குறைய கன்ருகத் தெரியும். பொதுவாகக் கூறுமிடத்தே, மனித ஜாதியார் அறிவு சம்பந்தப் பட்ட மட்டில் மஹா ஸஅக,மமான பரம ஸத்யங்களை யெல்லாம் கண்டுபிடித்து முடித்து விட்டனர். ஆனல் அறிவுக்குத் தெரிந்ததை மனம் மறவாதே பயிற்சி செய்ய, வலிமையற்றதாய் கிற்கிறது. அறிவு சுத்தமான பின்னரும், சித்தசுத்தி ஏற்பட வழியில்லாமல் இருக்கிறது. எனவே, அறிவில்ை எட்டிய உண்மைகளை மனிதர் ஒழுக்கத்திலே நடத்திக் காட்டுதல் பெருங் கஷ்டமாக முடிந்திருக்கிறது. ஆத்ம ஞானத்தின் சம்பந்தமாக கவனிக்குமிடத்தே, இந்த உண்மையைத் தாயுமானவர். “ வாசக ஞானத்தில்ை வருமோ ஸாகம் பாழ்த்த பூசலென்று போமோ புகலாய் பராபரமே” என்ற கண்ணியில் வெளியிட்டிருக்கிரு.ர். இதன் பொருள் 'வெறுமே வர்க்களவாக ஏற்பட்டிருக்கும் ஞானத்தினுல் ஆனந்த மெய்த முடியவில்லையே ? என் செய் வோம்? பாழ்பட்ட மனம் ஓயாமல் பூசலிட்டுக் கொண்டிருக் கிறதே? இந்தப் பூசல் எப்போது திரும் ? கடவுளே, நீ அதனைத் தெரிவிப்பாய் ' என்பதாம். இதே உண்மையை உலகநீதி விஷயத்தில் ஏற்கும்படி, திருவள்ளுவர்,