பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாசக ஞானம் 143 ' சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் ' என்ற குறளால் உணர்த்துகிரு.ர். இதன் பொருள் வாயினுல் ஒரு தர்மத்தை எடுத்துச் சொல் லுதல் யாவர்க்கும் சுலபமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அந்தச் சொல்லின்படி நடத்தல் மிகவும் துர்லபம் ' என்பது. திருஷ்டாந்தமாக, ஆண்களும் பெண்களும் ஸ்மானமான ஆத்ம இயல்பும் ஆத்ம குணங்களும் உடையோராதலால், பெண்களை எவ்வகையிலும் இழிந்தவராகக் கருதுதல் பிழை என்ற கொள்கை ஐரோப்பாவிற் படிப்பாளிகளுக்குள்ளே மிகவும் ஸாதாரணமாகப் பரவியிருக்கிறது. ஆயினும், பெண் களுக்கு வாக்குச்சீட்டு ஸ்வதந்திரம் வேண்டும் என்று கேட்டால், அதை பெரும்பான்மையான ஐரோப்பிய ராஜ தந்திரிகளும் பண்டிதர்களும் எதிர்த்துப் பேசுவதுடன், அங்ங்னம் எதிர்ப் பதற்குப் பல போலி கியாயங்களையும் காட்டவும் துணிகிருர்கள். “ விஷ்ணு பக்தி யுடையோர் எந்தக் குலத்தோர் ஆயினும் எல்லா வகையிலும் ஸ்மானமாகப் போற்றுவதற்குரியர் என்பது பூநீராமானுஜாசாரியருடைய பரமசித்தாக்தம்' எ ன் ப ைத நன்குணர்ந்த தற்காலத்து வைஷ்ணவர்கள் பிராமண குத்ர பேதங்களை மற்ற வகுப்பினரைக் காட்டிலும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகலை தென்கலைச் சண்டைகளைக் கூட விடாமல் வீண் சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்ருர்கள். ' எல்லாச் சரீரங்களிலும் நானே pவகை இருக்கிறேன். ' என்று கண்ணன் கீதையால் உணர்த்திய உண்மையையும், ' எல்லா உயிர்களினிடத்தும் தன்னையும், தன்னிடத்தே எல்லா உயிர்களையும் காண்பவனே காட்சியுடையவன் ' என்று கண்ணபிரான் அதே கீதையிற் சொல்லிய கொள்கையையும் வேதோப நிஷத்துக்களின் முடிவான தீர்மானம் என்று தெரிந்த ஹிந்துக்கள், உலகத்திலுள்ள மற்றெல்லா ஜனங்களைக் காட்டிலும், ஜாதி வேற்றுமை பாராட்டுவதில் அதிகக் கொடுமை செலுத்துகிருர்கள். ' இன்சொல் இனிதின்றல் காண்பான் எவன் கொலோ வன்சொல் வழங்குவது '