பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 பாரதி தமிழ் என்ற குறளின்படி, ' இனிய சொற்கள் சொல்வதினின்றும் நன்மைகள் விளைவது கண்டும் மானிடர் ஒருவருக்கொருவர் கொடுஞ் சொற்கள் வழங்குவது மடமை என்பது உலகத்தில் சாதாரண அனுபவமுடையவர்களுக் கெல்லாம் தெரியும். அங்ங்னம் தெரிந்தும், கொடுஞ் சொற்களும் கோபச் செயல்களும் நீங்கியவர்களே உலகத்திற் தேடிப்பார்த்தாலும் காண்பது அரிதாக இருக்கிறது. ' மரணம் பாவத்தின் கூலி” என்று கிருஸ்தவ வேதம் சொல் வது எல்லாக் கிருஸ்தவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும், பாவத்தை அறவே யொழித்த கிருஸ்தவர்கள் எவரையும் காண வில்லை. நாமெல்லோரும் பாவிகள் ' என்பதை பல்லவிபோலே சொல்லிக்கொண்டு காலங் கடத்துகிருர்கள். இதென்ன கொடுமை ! இதென்ன கொடுமை ! இதென்ன கொடுமை ! ஸாதாரணமாக வியாபாரம் விவசாயம் முதலிய காரியங்களிலேகூட மனிதர் நிச்சயமாக லாபங் கிடைக்கும் என்று தெரிந்த வழிகளே அனுசரிக்க முடியாமல் கஷ்டப்படுகிருர்கள். இந்தப் பெரிய சக்திஹlனத்திற்கு மாற்றுக் கண்டுபிடிக்காமல் நாம் சும்மா இருப்பது கியாயமன்று. கண்ணேத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவதுபோல, மனித ஜாதி நன்மையை கன்ருய் உணர்ந்தும் தீமையை உதற வலிமை யின்றித் தத்தளிக்கிறது. இதற்கென்ன நிவாரணம் செய்வோம் தைரியம் தான் மருந்து. தற்கால அஸெளகரியங்களேயும் கஷ்ட கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் மனிதர் உண்மையென்று கண்டதை நடத்தித் தீர்த்துவிட வேண்டும். அங்ங்னம் தைரியத்துடன் உண்மை நெறி பற்றி கடப்போரை மற்றவர்கள் புகழ்ச்சியாலும் ஸம்மானங்களாலும் ஊக்கப்படுத்த வேண்டும். கலி போதும்; வீண் துன்பங்களும் அநாவசியக் கஷ்டங்களும் பட்டுப் பட்டு உலகம் அலுத்துப் போய் விட்டது. வாருங்கள், மக்களே! வாருங்கள், அண்ணன் தம்பிமார்களே ! ஒருவரிருவர் நேர்மைவழியில் செல்ல முயல்வதில் பல இடர்கள் ஏற்படுகின்றன. அதனால் நேர்மை வழியிற் செல்ல விரும்பு