பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii பாரதி தமிழ் பாரதியார் திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு வீட்டில் குடியிருங் தார். அப்போது இவர் அடிக்கடி பார்த்தசாரதி சுவாமி கோவி லுக்குச் செல்வார். கோயில் யானைக்குப் பழம் தேங்காய் அன்போடு கொடுப்பார். அந்த யானைக்கு மதம் பிடித்திருந்த ஒரு நாளிலே அது பாரதியாரை இழுத்துத் தள்ளிவிட்டது. பாரதியாருக்கு மண்டையிலும் உடம்பிலும் காயங்கள் ஏற்பட்டன. அந்தக் காயங்களெல்லாம் ஆறிவிட்ட போதிலும் இந்த சம்பவத்திற்கு பிறகு பாரதியார் நெடுநாள் உலகில் வாழவில்லை. இவருடைய உடல் நலம் மிகவும் குன்றிப் போயிற்று. அதனல் 1921 செப்டம்பர் 11-ம் தேதி பாரதியார் காலமாளுர். தமது எழுத்து வன்மையினலே காட்டிலே விழிப்பையும் மொழியிலே புதிய மலர்ச்சியையும் உண்டாக்கிய பாரதியார் தமது 38-வது வயதிலேயே மறைந்துவிட்டார். இவரது உள்ளத்தில் பொங்கிய உணர்ச்சிக் கனலே இவருடைய உடம்பு அதற்குமேல் தாங்க முடியவில்லை. பாரதியார் மறைந்த பிறகுதான் அவருடைய கவிதைகளின் பெருமை நன்கு வெளிப்பட்டது. விடுதலைப்போராட்டத்திற்காக அக்காலத்திலே நடைபெற்ற எந்தக் கூட்டத்திலும் அவருடைய தேசீயப் பாடல்கள் முழங்கின. மக்கள் அதனலே புத்துணர்ச்சி பெற்ருர்கள். அவருடைய உரைகடை நேருக்கு நேரே சொல்லு வதுபோல உணர்ச்சி வேகமும், கருத்துத் தெளிவும் கொண்ட தாக அமைந்திருந்தது. உரைநடையிலும் இவர் புதுமையை உண்டாக்கினர். பெண் விடுதலையிலும், சமூக சீர்திருத்தங்களிலும் அரசியல் கொள்கைகளிலும் பாரதியார் மிக முற்போக்கான எண்ணங் களைக் கொண்டிருந்தார். இவைகளெல்லாம் இவர் எழுதிய பாடல்களிலும், கதை, கட்டுரைகளிலும் தெளிவாக வெளிப்பட் டன. உள்ளத்தில் ஒளியுண்டானல் வாக்கினிலே ஒளியுண்டா கும் என்று இவரே பாடியுள்ளது போல பாரதியாருடைய உள்ளத்தில் தோன்றிய ஒளி இவருடைய இலக்கியப் படைப் புக்கள் அனைத்திலும் ஒளி வீசுவதை நாம் காண்கிருேம். அதனல் இவரை இன்று மகாகவி என்று நாம் போற்றுகிருேம்.