பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 பாரதி தமிழ் பிறப்பேனும் கிடைக்கும் என்பது நமது தேசத்துப் பொது நம்பிக்கை. பாவம் செய்யும் ஒருவனே அடுத்த ஜன்மம் மிருக மாகப் பிறப்பாய் என்ருல் அவனுடைய மனம் பதைக்கிறது. ஆனல், இந்த ஜன்மத்திலேயே மனிதர்கள் தாம் மிருகங்களைப் போலிருப்பதைக் கவனிப்பது கிடையாது. ஒவ்வொரு கிமிஷத்தி லேயும் ஒருவன் கினேக்கும் கினைப்புகளும் செய்யும் செய்கைகளும் அவன் பலவிதப் பிறவிகளை அடைவதற்குக் காரணமாகின்றன. இந்த உலகத்திலேயே, இப்பொழுதே, ஒரே சரீரத்திலுள்ள ஒருவன் ஆயிரம் பிறவிகள் பிறந்து மடிகிருன். ஒவ்வொரு கூடிணமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து மடிகின்ருன் ; ஒவ்வொரு கூடிணமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து மாய்கிருன்' என்று கூறத் தகும். மிருகங்களைப் போன்ற மனிதர்களை நாம் பார்த்ததில்லையா ? நம்மை நாம் கவனிக்கு மிடத்து, எத்தனை வித மான மிருகங்களாயிருந்திருக்கிருேம் என்பது தெரியும். வஞ்சனே யாலும், தந்திரத்தாலும், சமயத்திற் கேற்பப் பல வித கபடங்கள் செய்து ஜீவிப்பவன் நரிதானே ? ஊக்கமில்லாமல் ஏதேனு மொன்றை கினேத்துக் கொண்டு மனஞ்சோர்ந்து தலே கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. மறைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு. தாமதத்திலும், புகழிலும் விருப்ப மில்லாமல், அற்ப சுகத்திலே மூழ்கிக் கிடப்பவன் பன்றி. சுயா தினத்திலே இச்சையில்லாமல் பிறர்களுக்குப் பிரியமாக கடந்து கொண்டு, அவர்கள் கொடுத்ததை வாங்கி வயிறு வளர்ப்பவன் காய். கண்ட விஷயங்களிலெல்லாம் திடீர், திடீர் என்று கோப மடைகிறவன் வேட்டைகாய். காங்கிரஸ் சபையிலேயும் சேர்ந்து கொண்டு, ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் ஹிதமாக நடக்க வேண்டுமென்ற விருப்பமுடைய மேத்தா கட்சியைச் சேர்ந்தவன் வெளவால். அறிவுத் துணிவால் பெரும் பொருள்களேத் தேர்ந்து கொள்ளாமல், முன்னேர் சாஸ்திரங்களேத் திரும்பத் திரும்ப வாயினல் சொல்லிக் கொண்டிருப்பவன் கிளிப்பிள்ளை. பிறர் தன்னை எவ்வளவு அவமதிப்பாக கடத்தியபோதிலும் அவன் அக்கிரமத்தை கிறுத்த முயலாமல் தனது மந்த குணத்தால் பொறுத்துக் கொண்டிருப்பவன் கழுதை. வீண் மினுக்கு மினுக்கி டம்பம் பாராட்டுகிறவன் வான்கோழி. கல்வி யறிவில்லாதவனே