பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. உலக வாழ்க்கையின் பயன் உலக வாழ்க்கையில் மானிடராலும் மற்ற உயிர்களாலும் விரும்பப்படும் மிகச் சிறந்த பயன் யாது? எப்போதும் நீங்காத, எப்போதும் மாருத, எப்போதும் குறையாத இன்பமெய்தி வாழ்தல். இவ் வகையான இன்பத்தை எய்தும் பொருட்டாகவே மானிடர் கல்வி கற்பதும், பொருள் சேர்ப்பதும், தவங்கள் செய்தலும், அரசாள்வதும், களவு செய்தலும், கொலை செய்வதும், பேசுதலும் சிரித்தலும், ஆடுதலும், பாடுதலும், அழுதலும், உழுதலும்எல்லாத் தொழிலும் செய்கிருர்கள். மனிதர் மட்டுமே யன்றி மற்ற எல்லா உயிர்களும் தாம் செய்யும் எல்லாத் தொழில்களையும் மேற்கூறிய ஒரே நோக்கத்தோடுதான் செய்கின்றன. ஆயினும், இதுவரை மேற்படி கித்யானந்த கிலேயை எந்த உயிரும் எய்தவில்லையென்பது தெளிவு. உலகத்தில் தவிர்க்க முடியாத துக்கம் கிறைந்திருப்பதே புத்தர் கண்டதாகக் கூறப் படும் நான்கு உண்மைகளில், முதலாவது. இங்ங்னம் தீராத துன்பம் இருப்பதற்குக் காரணம் ஒவ்வோர் உயிரும் தன்னே யேனும் பிற உயிர்களேயேனும் பார்த்தும் கருதியும் ஓயாமல் அருவருப்பும் பயமும் அடைகின்றனவாதலேயாம். இங்ங்னம் ஒவ்வொரு உயிர்க்கும் தன்னிடத்தும் பிற உயிர்களி டத்தும் பொருள்களிடத்தும் தீராத சகிப்பின்மையும், பயமும், வெறுப்பும், கவலையும் ஏற்படுவதற்குக் காரணம், அநாதி காலங் தொட்டு ஜீவர்களுக்குள்ளே நிகழ்ந்துவரும் ஓயாத போராட்டத் தால் ஏற்பட்ட பழக்கக் தவிர வேருென்றுமில்லை. எல்லா வஸ்துக்களும் எல்லாக் குணங்களும் ஒன்றென்னும் வேதாந்த ஞானத்தால் இந்த அஞ்ஞானப் பழக்கத்தை நீக்க வேண்டும். மேற்படி ஞானம், உலகம் தோன்றிய கால முதலாக, எத்தனையோ பண்டிதர்களின் மனத்திலும் கவிகளின் மனத்திலும் உதித்திருக்கிறது. எத்தனையோ கோடிக்கணக்கான பாமரர்