பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பாரதி தமிழ் இதிலெல்லாம் இது வேகாது. உலகத்தாருடன் கூடி எல்லா வகைகளிலும் மற்ற உலகத்தாரைப் போலவே தொழில் செய்து கொண்டு உலக விவகாரங்களே நடத்திய வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங்கொடாதபடித் தன் மனத்தைக் கட்டக் கூடிய திறமையே பயன் தரக் கூடியது, மற்ற முயற்சிகளெல்லாம் வீண். நீதி, ஸமாதானம், ஸ்மத்துவம், அன்பு இவற்ருலேயே இவ் வுலகத்தில் தீராத தைரியமும், அதனலே தீராத இன்பமும் எய்தலாம். வேறு வழியில்லை.