பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கொள்கைக்கும் செய்கைக்கும் உள்ள தூரம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையை உடையவராயிருக்க லாம். அதாவது, மற்ற எல்லாரையும் விட ஒரு கியாயம், அல்லது ஒரு தர்மம், அல்லது ஒரு மதம், இவற்றில் ஒன்றில் ஒருவன் விசேஷ மனப் பற்றுடையவய்ை இருக்கலாம். இவை ஒவ்வொன்றும் ஸர்வ ஐன ஸம்மதமாய் நன்மை பயக்கத்தக்கதாய் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு கொள்கை தீமையை விளையச் செய்யினும் செய்யும். நன்மையை விளையச் செய்யினும் செய்யும். ஆனால், ஒருவர் ஒரு கொள்கைப்படி கருமங்களைச் செய்யும்பொழுது அது தனக்காவது பிறருக்காவது கன்மை தருமென்றே செய்வார். ஒருவன் கொடுங்கோல் அரசில் குடித்தனம் செய்தால் வயிற்றுக்குச் சோறில்லாமலும் சர்க்கார் அதிகாரிகளின் ஹிம்சையால் மானமிழந்தும் துன்பமடைய வேண்டியிருக்கிறது ; குடியானவனுயிருந்து பயிர்த்தொழில் செய்யவோ அநேக தடங்கல்கள் இருக்கின்றன ; பட்டத்தில் மழை பெய்யவில்லே ; அப்படி மழை பெய்தாலும், உழ எருதுகள் இல்லை; உழுதாலும் விதைக்க வித்துக்களில்லை ; விதை விதைத்தாலும், களேகளேச் சரியான காலத்தில் எடுத்துப் பயிர் அடித்துக் காவல் காத்து மாசூலை அறுவடை செய்து வீடு கொண்டுவந்து சேர்த்து ஸ்-கிக்க ஐவேஜ் இல்லை ; அப்படி வீடு கொண்டு வந்து சேர்த்துப் பலனே அநுபவிக்கவும் இடமில்லை ; ஏனென்ருல் சர்க்கார் தீர்வைக்கே தானிய தவசங்களே களத்தில் விற்றுவிட வேண்டி யிருக்கிறது. ஆகையால், உழுது உண்ணுவதை விட வேறு என்ன தொழில் செய்தாயினும் பிழைக்கலாமென்று கொள்ளைக் கூட்டத்தோடு சேர்ந்து பிரயாணிகளை வழிப்பறி செய்தோ, கன்னம் வைத்துத் திருடியோ பிழைக்க ஆரம்பிக்கிருன். அவன் செய்யும் தொழில் ஒரு கொள்கையினடியாய் உண்டானதாயினும், அது அவனுக்குத்தான் நன்மை தருமே யல்லாது இதரர்களுக்குத்