பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பாரதி தமிழ் தீமையே செய்யும். இருந்தாலும் ஆபத் தர்மம் என்ற கொள்கையை அவன் அனுசரிக்கிருன். மனேவி மக்கள் உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி, பார்த்தவரெல்லாம் பரிதாபங் கொள்ளும்படியாய், ஒரு புருஷன் குடும்ப சவரrண்ை செய்வ தால், அவன் மானம் அழிந்து போகிறது. பயிர்த் தொழிலில் ஒன்றும் கிடைக்காது' என்ற நிச்சயம் ஏற்பட்டு விட்டது. திருட்டுத் தொழிலில் ஏதேனும் பசியார உண்ணக் கிடைக்கும் என்ற திண்ணம் உண்டு. பிரயாணிகளோ ஆங்கிலேயர் ஆசீர் வாதத்தால் கிராயுதபாணிகளாய் இருக்கிருர்கள். போலிஸ் என்ற உள் காட்டுக் காவற்காரரோ சம்பளம் சொற்பமான தாலும், அங்கியர் அரசாட்சி தங்கள் தயவின்றி நடவாதென்ற நம்பிக்கையாலும், தாங்களே திருடத் தயாராயிருக்கிருர்கள். கொள்ளைக் கூட்டத்தாரோடு எக்கிரிமெண்டு (உடன்படிக்கை) செய்துகொண்டு அவர் கொள்ளையில் ஒரு பங்கு பெற்றுக் காலத்தைத் தள்ள காத்துக் கொண்டிருக்கிருர்கள். இத்தியாதி சவுகரியங்களால் திருட்டுப் பிழைப்பே மேலானதென்று ஒரு குடியானவன் அதைக் கைக் கொள்ளுகிருன். ஆனால் அந்தத் தொழிலில் ஜீவஹிம்ஸை செய்தே நடக்க வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்வது பாபமாகும். அந்தப் பாபத்தால் பாபத்திற் குரிய மோட்சத் தடை நேரிடும் என்ற பயமோ, சந்தேகமோ அவனுக்கு உண்டாகிறது. அதற்கு ஈடாக அவன் வழிப்பறி செய்யுங் காலத்தில் ஒரு தருமத்தை அனுசரிக்கிருன். அதாவது, சில வகுப்பார்களை அவன் தொடுவதில்லை. ஏழைகள், துணை யின்றிச் செல்லும் ஸ்திரீகள், நோயாளிகள், துார ஸ்தலங்களி லிருந்து வரும் யாத்திரைக்காரர்கள் ஆகிய இவர்களேயும் இவர் களைப் போன்ற மற்றவர்களையும் ஹிம்லிப்பதில்லை. அதோடு கில்லாமல், தான் கொள்ளையடித்து ஈட்டிய பொருளில் ஒரு பாகத்தைக் கொண்டு தான தருமங்களும் செய்கிருன். தன்னைப் பகலில் கொள்ளையடித்த சாவுகாரனேயும், லேவாதேவி செய்யும் கிஷ்கண்டகனையும், ஏன் இரவிற்கொள்ளே யடிக்கக் கூடாதென்று தன்னைத்தானே கேட்கலாகிருன். குனிந்தால் வரி, கிமிர்ந்தால் வரி, கின்ருல் வரி, உட்கார்ந்தால் வரி, கில வரி, நீர் வரி, பாசி வரி, ரோட்டு வரி, காட்டு வரி, வீட்டு வரி, மோட்டு வரி,