பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பாரதி தமிழ் பாரத தேசத்தாராகிய நாம் சகலவிதமான சுதந்திரங்களையும் இழந்து எங்கேயோ யிருந்துவந்த ஒரு வெள்ளேகிற ஜாதியாருக்கு அடிமைப்பட்டிருக்கிருேம். காம் முப்பது கோடி ஜனங்கள். அவர்கள் இரண்டு லக்ஷங் கூட இல்லை. உலகத்தோர் எல்லோரும் இதை எங்கும் எக்காலத்திலுமில்லாத அற்புதம் என்று கினைக் கிருர்கள். இதல்ை உலகத்திலுள்ள மற்ற ஜாதியார்கள் நம்மை (முப்பது கோடி அல்லது மூவாயிரம் லக்ஷம் ஜனங்களையும்) அடக்கி ஆளும் ஆங்கிலேயர்களே மகா வீரகுரர்களென்றும், ஒப்பற்ற பலிஷ்டர்களென்றும் ஒப்புக் கொள்வதில்லை. ஆனல் அதற்குப் பதிலாய், நம்மிடத்தில் அவர்களுக்கு அவ்வளவுக் கவ்வளவு வெறுப்பும் மதிப்புக் குறைவும் ஏற்பட்டுவிடுகிறது. இந்தியன் எங்கே போனலும் கிந்திக்கப்படுகிருன். யாரும் நம்மீது காறித் துப்புகிருர்கள். உலகத்தோர் . இந்த இந்தியர் என்ற ஆடுகளை ஆங்கிலேயர் மட்டுமல்ல, வேறே எந்த ஜாதி யாரும் இலேசாக ஆளலாம் என்று கம்பியிருக்கிருர்கள். அப்படி யிருக்க, நாம் மிகுந்த அந்தஸ்துக்களைப் பாராட்டினல் அது ஒவ்வா. ஒழுக்கம். நாம் சுயாதீனம் அடைந்த பிறகு மீசை முறுக் கலாம். இப்பொழுது வீண் டம்பங்கள் செய்தால் எல்லோரும் நகைப்பார்கள். நம்மில் ஒவ்வொரு புருஷனும் ஒவ்வொரு ஸ்திரியும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கொள்கை ஒன்றேதான் உண்டு. அதாவது, நம்முடைய அருமை காட்டில் சுயாதீனத்தை காட்டி பிறர் அஞ்சி மதிக்கும்படியாக நாம் ஜீவிக்க வேண்டியது. இந்தக் கொள்கைப் படி நடக்க என்ன இடையூறுகள் வந்தாலும் அவற்றை நாம் விலக்கிக் கொண்டு போக வேண்டும். இந்த கொள்கையைக் கடைப்பிடித்து கடப்பதில் எவ்விதமான சுகத்தையும், மரியாதை யையும் அந்தஸ்தையும் இச்சிக்கப்படாது. வீடு வாசல், மனே மக்கள், எல்லோரையும் இழக்கும்படி நேர்ந்தாலும் இழந்தே" தீரவேண்டும், மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார் எவ்வவர் தீமையு மேற்கொள்ளார்-செவ்வி அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார் கருமமே கண்ணுயினர்