பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஞான ரதம் பீடிகை பின்மாலைப்பொழுது, திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் கடற் பாரிசத்தை நோக்கியிருக்கும் ஒர் வீட்டு மேடை யின் மீது சிரமபரிகாரத்தின் பொருட்டு ஒர் மஞ்சத்தின்மீது படுத்துக்கொண்டிருந்தேன். ஆனந்தகரமான கடற்காற்று நான் படுத்திருந்த முன்னறையிலே கா ன் கு பக்கங்களிலிருந்தும், கண்ணுடிச் சாளரங்களின் மூலமாகவும், புறக்கதவின் கிலேகளின் மூலமாகவும், வந்து கிரம்பிய வண்ணமாக இருந்தது. அந்தக் காற்றும், பின் மாலையொளியும் கலந்ததினல் உண்டாகிய தெளி வும், இன்பமும் என்னல் கூறமுடியாது. "ஆஹா! இப்போது போய் ஸ்நானம் செய்துவிட்டு, நேர்த்தியான ஒரு குதிரை வண்டி யில் ஏறிக்கொண்டு, கடற்கரையோரமாகத் தெற்கே அடையாற் றுக்குப் போய், வழியெல்லாம் காளிதாசனுடைய சாகுந்தலத்தை யேனும், அல்லது ஒர் உபநிஷத்தையேனும் கொண்டுபோய்ப் படித்து இன்பமடைந்து கொண்டே திரும்பினல் நல்லது என்ற சிந்தனை உண்டாயிற்று. ஆனல் என்னிடம் குதிரை வண்டி கிடையாது என்ற விஷயம் அப்பொழுதுதான் ஞாபகத்திற்கு வந்தது. " அடடா ! மிகுந்த செல்வம் இல்லாததனால், உலகத்திலே பலவிதமாகிய இழிவான இன்பங்கள் மட்டுமல்ல, உயர்ந்த இன்பங்கள் கூடப் பெறுவதற்குத் தடை ஏற்படுகிறதே ! ' என்று எண்ணினேன். அப்பொழுது, என் ம ன ம்-"மூடா, ஸ்கல மனிதர்களிடத்திலும் ஈசன் ஞானம் என்பதோர் தெய்வீக ரதத்தைக் கொடுத்திருக்கின்ருர். அது விரும்பிய திசைகளுக் கெல்லாம் போய் விரும்பிய காட்சிகளையெல்லாம் பார்த்து வரக் கூடிய வல்லமை உடையது ; அதைப் பயன்படுத்தி இன்பமடை யாமல் எ ங் த கிமிஷத்திலும் உன்னைக் கீழே தள்ளித் திங்கு செய்யக்கூடியதாகிய இழிந்த மரவண்டியிலே ஏன் விருப்பம்