பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பாரதி தமிழ் நீரோடைபோல் மந்தம் அடைகின்றது. கால்களில் தீவிர மில்லாமற் போய்விடுகிறது. கவலைகள் என்ற விஷ ஜந்துக்கள் ஒருவனுடைய சரீரத்தை உள் ளு ர அரித்துவிடுகின்றன. சரீரத்தை மட்டுமா ? அறிவையும் பாழாக்குகின்றன. மறதியை அதிகப்படுத்திவிடுகின்றன. முக்கியமான செய்திகளெல்லாம் நல்ல சந்தர்ப்பத்திலே நினைவிற்கு வராமல் போய்விடுகின்றன. படித்த படிப்பெல்லாம் பாலைவனத்திலே பெய்த மழைபோல கிஷ்பலய்ை விடுகின்றது. அறிவிலே பிரகாசமில்லாமல், எப் போதும் மேகம் படர்ந்தது போலாய்விடுகிறது. யோசனை தட்டு கிறது. ஐயோ! இந்தக் கவலைகளாகிய சிறிய சிறிய விஷப்பூச்சி களுக்குள்ள திறமை வைத்திய சாஸ்திர கிபுணர்கள் கூறும் மஹா கொடுரமான-கண்ணுக்குத் தெரியாத-நோய்ப் பூச்சி களுக்குக்கூடக் கிடையாது. ' ஞான ரதமே, நீ நம்மை இப்போது கவலையென்பதே இல்லாத உலகத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்” என்று கட்டளே யிட்டேன். அப்போது மன்ம் வ ந் து ரதத்தைத் தடுத்துக் கொண்டது. "அது அத்தனை ஸாகமான உலகமன்று. கவலை இல்லாமலிருந்தால் மட்டும் போதுமா ? வேறு இன்பங்கள் அனு பவிக்கக்கூடிய இடம் ஏதேனும் தமக்குத் தோன்றவில்லையா ? கவலேயே இல்லாத இடத்தில் ஸுகமும் இராது என்று எனக்குத் தோன்றுகிறது. மேலும், -மேலும், -என்னவோ ; இன்ன காரணமென்று சொல்லமுடியாது. ஆனால் அங்குப் போவதில் எனக்குப் பிரியமில்லை” என்று மனம் கூறிற்று. நான் கோபத்துடன், சீச்சி! பேதை மனமே, உனக்கு ஓயாமல் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வேதனைகளேயும் உளேச்சல் களையும் கண்டு இரங்கி, நான் உன்னைச் சிறிது நேரமேனும் அமைதியுலகத்திற்குக் கொண்டுபோய் வைத்துத் திரும்பலாம் என்று உத்தேசித்தேன். இதற்கு நீயே ஆக்ஷேபம் சொல்ல வருகிருயா ?” என்று கண்டித்தேன். மனம் பிணங்குதல் மாருமல் மறுபடியும் எதிர்த்து நின்றது. எனக்கு இந்த மண்ம் என்ற மோஹினியிடத்தில் காதல் அதிக முண்டு. ஆதியில் எவ்வாறு இந்த மோஹம் உண்டாயிற்று என் பதை இங்கே விஸ்தரிக்க முடியாது. அது ரஹஸ்யம். ஆனால்,