பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞான ரதம் 169 நாளேற நாளேற நான் வேறு இந்த மனம் வேறு என்ற த்வைத சிந்தனையே பெரும்பாலும் மறந்துபோகும் வண்ணமாக எனக்கு இம்மோஹினியிடத்தில் பிரமை மிகுந்து போய்விட்டது. இந்த மனம் படும்பாடுகளைக் கண்டு பொறுக்காமலே தான் கான் சாந்திலோக தரிசனத்திலே விருப்பம் கொண்டேன். இப்போது மனம் அந்த யோசனையில் கிஷ்காரணமாக வெறுப்புக் கொள் வதைக் கண்டு எனக்குத் திகைப்பும், இரக்கமும், கோபமும் கலந்து பிறந்தன. எவ்வளவோ விதங்களில் மனத்தைச் சமா தானம் செய்ய முயன்றேன். மனம் பின்னும் கண்ணே மூடிக் கொண்டு ஒரேயடியாக மூடச் சாதனை சாதிக்கத் தொடங்கிற்று. எனக்கு இன்ன செய்வதென்று தெரியவில்லை. பிறகு ஒரே நிச்சயத்துடன், "மனமே, கான் இந்த விஷயத்தில் உன் பேச்சைக் கேட்கவே மாட்டேன். உன்னுடைய நன்மையைக் கருதியே நான் செய்கிறேன்-ஞானரதமே, உடனே புறப்படு' என்றேன். அடுத்த நிமிஷத்தில் உபசாந்தி பூமிக்கு வந்து சேர்ந்தோம். நெடிதோங்கி வளர்ந்த கோட்டைச் சுவர் வாயியிலே போய் ரதம் கின்றுவிட்டது. நான் தூரத்திலிருந்தே அந்தக் கோட்டை யைப்பார்க்க முடிந்ததாயினும், எனது ஞானத் தேர் போனவுடன் அந்த வாயிற் கதவுகள் தாமே திறந்துவிடும் என்று எண்ணி னேன். அவ்வாறு திறக்கவில்லை. என்ன ஆச்சரியம் ! ஞானத் தேர்கூட நுழைய முடியாதபடி அத்தனே பரிசுத்தமானதா இந்த லோகம் என்று வியப்புற்றேன். எனது மனமோ முன்னேக் காட்டிலும் ஆயிர மடங்கு அதிகமாகத் நடுங்கத் தொடங்கிற்று. அதற்கு என்னிடம் பேசக்கூட காவெழவில்லை. கோட்டை வாயிலுக்கு வெளியே ஒரு வாயில் காப்பான் உருவின கத்தி யுடன் கின்றுகொண்டிருந்தான். நெருப்பு கிறங் கொண்டதும், இமயமலையைக் கூட ஒரே வெட்டில் பொடிப்பொடியாகச் செய்து விடுமென்று தோன்றியதுமாகிய அந்த வாளின்மீது ' விவேகம்' என்று கண்ணேப் பறிக்கக்கூடிய ஜோதியெழுத்திலே எழுதப் பட்டிருந்தது. வாயில்காப்பான் :- " யார் அது? எங்கு வங் தாய்?" என்ருன். நான் அவனுக்கு வந்தனம் கூறிவிட்டு, " உபசாந்தி லோகத்தைப் பார்த்து விட்டுத் திரும்பலாமென்ற எண்ணத்